திரித்துவ ஞாயிறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திரித்துவ ஞாயிறு அல்லது மூவொரு கடவுள் பெருவிழா (Trinity Sunday) எனப்படுவது மேற்கத்தையக் கிறித்தவ திருவழிபாட்டு நாட்காட்டியில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும் விழாவாகும். கிழக்கத்திய கிறித்துவத்தில் இது பெந்தக்கோஸ்து ஞாயிற்றுக்கிழமையோடு இணைத்து சிறப்பிக்கப்படுகிறது. திரித்துவ ஞாயிறு நாளன்று கிறித்தவக் கோட்பாடான மூவொரு கடவுள் கடவுளின் பற்றிய இறைநம்பிக்கை சிறப்பாக நினைவுகூரப்பட்டு வழிபாட்டு முறையில் கொண்டாடப்படுகிறது.

விரைவான உண்மைகள் திரித்துவ ஞாயிறு Trinity Sunday, கடைப்பிடிப்போர் ...

உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து ஆண்டுநடத்தி, உய்விக்கின்ற கடவுள், அனைத்தையும் கடந்த பரம்பொருள் ஒருவரே. ஆனால் அவர் வரலாற்றில் தம்மை மூன்று “ஆள்களாக” (persons) வெளிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று “ஆள்கள்” தேவபிதா, புத்திரன், பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையான சமய நம்பிக்கையே கிறித்தவ மரபில் “மூவொரு கடவுள் கொள்கை” என்பது.

இந்த மறையுண்மை “திரித்துவ ஞாயிறு” பெருவிழாவின் போது சிறப்பிக்கப்படுகிறது.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads