திருகு பற்சக்கர இயக்கி
கியர் ஏற்பாடுகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருகு பற்சக்கர இயக்கி (Worm drive) என்பது பற்சில்லுகளுடன் கூடிய ஒரு அமைப்பாகும். இது திருகாணிப்புரியுடன் கூடிய திருகும், அதனுடன் சரியாகப் பொருந்தும் படியான திருகு பற்சக்கரமும் இணைந்த ஒரு அமைப்பாகும். இதில் திருகு என்ற பாகமும், திருகு பற்சக்கரம் என்ற பாகமும் உள்ளது. திருகு பற்சக்கர இயக்கி அமைப்பிலுள்ள பற்சக்கரம் (gear) சுழலும் வேகத்தைக் குறைத்து, முறுக்கு விசையின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். இது ஆறு வகை எளிய இயந்திரங்களில் ஒன்றாகும். இயக்கத்தை 900 கோணத்திற்குத் திருப்புவதே, இதன் மிக முக்கியப் பயனாகும்.

Remove ads
விளக்கம்

பொதுவான பற்சில்லுடன் கூடிய பற்சக்கர அமைப்பில் உள்ளதை விட சிறிய பற்சக்கரங்களே, திருகு பற்சக்கர இயக்கியின் பற் சக்கர அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. திருகும், திருகு பற்சக்கரமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்கும். திருகிலுள்ள புரிகளின் எண்ணிக்கையும், திருகு பற்சக்கரத்திலுள்ள புரிகளின் எண்ணிக்கையும் திருகு பற்சக்கர இயக்கியின் இயக்கத்தை நிர்ணயிக்கிறது.

Remove ads
வகைகள்
மூன்று வகையான திருகு பற்சக்கர இயக்கிகள் உள்ளன.
- வரிப்பள்ளமில்லா திருகு பற்சக்கர இயக்கிகள்.[1]
- ஒற்றை வரிப்பள்ளமுள்ள திருகு பற்சக்கர இயக்கிகள்.[2]
- இரட்டைவரிப்பள்ளமுள்ள திருகு பற்சக்கர இயக்கிகள். இவ்வகை இயக்கிகள் அதிகப் பளுவையும் சுழலுச் செய்யக் கூடியன.[3]
வேலை செய்யும் விதம்
முன்னும் பின்னும் இயங்கும் மற்ற பற்சில்லுகளைப் போல்லல்லாமல், திருகு பற்சக்கர இயக்கிகள் ஒரே திசையிலே சுழலக் கூடியவை. இதனால் திருகு பற்சக்கரம், திருகை இயக்குவது தவிர்க்கப்படுகிறது.திருகு மட்டுமே திருகு பற்சக்கரத்தை இயக்க முடியும். பின்னால் சுற்றும் போது ஊராய்வு மிக அதிகமாவதால், திருகு பற்சக்கர இயக்கி தனது இயக்கத்தை நிறுத்திவிடுகிறது.
பயன்பாடுகள்

- நரம்பிசைக் கருவிகளிலுள்ள நரம்புகளின் இறுக்கத்தைச் சரிசெய்ய உதவுகிறது.
- மின்உயர்த்தியில் (Elevator) பழுது ஏற்பட்டால், பின்னோக்கி வராமல் இருக்க (விபத்தைத் தவிர்க்க) உதவுகிறது.
- சரக்குந்துகளில் பாரத்தின் காரணமான சக்கரங்களில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களைச் சரி செய்ய உதவுகிறது.
- இரும்பு கதவைக் கட்டுப்படுத்தும் திருகு பற்சக்கர இயக்கி, ஒரு நிலையில் உள்ள கதவை அதே நிலையில் வைத்திருக்க உதவுகிறது மற்றும் கதவை உடைக்க இயலாத, ஒரு பாதுகாப்பு கருவியாக செயல்படுகிறது.[4]
- பொம்மை வாகனங்களில், நெகிழியால் உருவாக்கப்பட்ட திருகு பற்சக்கர இயக்கி பயன்படுகிறது.[5]

Remove ads
இடது கை சுழற்சி மற்றும் வலது கை சுழற்சியுள்ள திருகு பற்சக்கர இயக்கிகள்

- இடது கை சுழற்சியுள்ள திருகு பற்சக்கர இயக்கிகள் இடஞ்சுழியாக சுழலக் கூடியவை.
- வலது கை சுழற்சியுள்ள திருகு பற்சக்கர இயக்கிகள் வலஞ்சுழியாக சுழலக் கூடியவை.[6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads