திருகோணமலைக் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

திருகோணமலைக் கோட்டை
Remove ads

திருகோணமலை கோட்டை (பிரட்ரிக் கோட்டை) திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும்.[1][2][3]

விரைவான உண்மைகள் திருகோணமலை கோட்டை Fort Fredrick, வகை ...

திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும்.

Remove ads

வரலாறு

1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.

ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலரும் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads