திருக்கச்சி நம்பிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் கஜேந்திரதாசர் என்பதாகும். இவர் வைணவர்களில் முக்கியமான ராமானுஜரின் குரு என்று குறிப்பிடப்படுகிறார்.[1] திருமாலுக்கு திருஆலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்பவராகவும், பெருமானிடம் பேசும் திறன் கொண்டவராகவும் திருக்கச்சி நம்பிகளை வைணவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.[2]
Remove ads
பிறப்பு
சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009-ஆம் ஆண்டு வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாகப் பிறந்தவர் கஜேந்திர தாசர்.[3]
பெயர்க்காரணம்
கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார். அவரது சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருந்தார்கள். இருப்பினும் கஜேந்திரதாசர் காஞ்சியில் உறையும் பேரருளாளபெருமாளுக்கு ((வரதராசப் பெருமாள்)) திருவாலவட்ட கைங்கரியம் செய்வதிலேயே தன் வாழ்வினை கழித்ததால், இவரைச் சிறப்பிக்கும் வகையில் வைணவர்கள் இவரைத் திருக்கச்சிநம்பிகள் (கச்சி-காஞ்சி) என அழைக்கலாயினர்.
இராமானுஜரின் குரு
இராமானுஜர் தன்னுடைய குருவான திருக்கச்சி நம்பிகளை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கவும், அந்த உணவின் மிச்சத்தை உண்ணவும் எண்ணுகிறார். இதை அறிந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எண்ணம் வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது எனக் கூறுகிறார். ஆனால் இராமானுஜரின் விருப்பமே முதன்மையாக இருப்பதால் வர்ணாசிரமத்தினைப் புறந்தள்ளி இராமானுஜரின் வீட்டில் உணவருந்துகிறார்.[4]
வாழ்வின் இறுதி
தினமும் காஞ்சிக்குச் சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையின்கண் ஏற்பட்ட தாளாமைக் கண்டுவருந்தியிருக்க பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவ திவ்யதேசங்களில் முதன்மையாகப் போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார். அத்தலமே இன்று பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகில் திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராசப் பெருமாள் கோயில் என வழிபாட்டில் இருந்து வருகிறது.
Remove ads
இலக்கிய பணி
- காஞ்சி வரதராசப் பெருமாள் மீது """தேவராஜ அஷ்டகம்""" எனும் வடமொழியில் அமைந்த நூலை இயற்றியவர் திருக்கச்சிநம்பிகள் ஆவார்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads