திருக்குறுந்தாண்டகம்
தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.

பெயர்க்காரணம்
பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.[4][5] திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது[6].
நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு
இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு[7].[8]
திருக்குறுந்தாண்டகம் முதற்செய்யுள்
- நிதியினைப் பவளத் தூணை
- நெறிமையால் சினைய வல்லார்
- கதியினைக் கஞ்சன் மாளக்
- கண்டுமுன் அண்டம் ஆளும்
- மதியினை மாலை வாழ்த்தி
- வணங்கிஎன் மனத்து வந்த
- விதியினைக் கண்டு கொண்ட
- தொண்டனேன் விடுகி லேனே. [9]
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads