திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூர் பகுதியில் உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த பேருந்து அமைக்க திட்டமிடப்பட்டு இடங்களை சமன்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இங்கு ஒரே நேரத்தில் 350 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் வசதியுடன், ஆம்னி பேருந்து நிறுத்தம், டாக்ஸி ஸ்டாண்ட், உணவகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைய உள்ளன.[1][2][3]

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஒட்டியே மொத்த மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட்டும் அமைய உள்ளது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 832 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

48 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 140 கோடி, கனரக சரக்கு வாகனம் முனையம் அமைக்க ரூபாய் 76 கோடி, சாலைகள் மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 75 கோடி பல்வகைப் பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைக்க 59 கோடி என ரூபாய் 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களிடமிருந்து மாதிரி வரைபடங்கள் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன அவற்றில் ஒரு வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads