திருத்தந்தையின் வழுவாவரம் வரம்

From Wikipedia, the free encyclopedia

திருத்தந்தையின் வழுவாவரம் வரம்
Remove ads

திருத்தந்தையின் வழுவாவரம் அல்லது திருத்தந்தையின் தவறா வரம் என்பது திருத்தந்தை தமது பதவியின் காரணமாக அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளின் உச்ச நிலை மேய்ப்பரும் ஆசிரியரும் என்ற முறையில் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்தவற்றில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒரு கோட்பாட்டை வரையறுத்துப் பிரகடனம் செய்யும்போது தமது போதனையில் தவறிழைக்காமல் கடவுளால் காக்கப்படுவார் என்னும் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை ஆகும். இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தாலும், குறிப்பாக கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிகுதியாக நம்பப்பட்டாலும், 1869–1870இல் நடைபெற்ற முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது.[1]

Thumb
திருப்பீடத்தின் முத்திரை

திருத்தந்தை தனது வழுவாவரத்தால் வரையறுத்துப் பிரகடனம் செய்வது திருச்சபையின் ஆசீரியத்தில் அடங்கும். ஆயர்கள் ஒரு பொதுச் சங்கத்தில் ஒன்றுக்கூடி அறிக்கையிடும்போதும், உலகம் முழுவதும் பரவியுள்ள ஆயர்கள் தங்களுக்குள்ளும் திருத்தந்தையோடும் இணைந்து விசுவாசம் அல்லது அறநெறிக் காரியங்களை அதிகாரபூர்வமாகப் போதித்து குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டை அறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று உடன்படும் போது அவர்களும் வழுவாவரம் பெற்றுள்ளனர் என நம்பப்படுகின்றது.

Remove ads

கத்தோலிக்கரின் மறுப்பு

திருத்தந்தையின் வழுவாவரம் பற்றிய கருத்து முதலில் திருத்தந்தையர்களாலேயே ஏற்கப்படவில்லை. 13ம் நூற்றாண்டில் பீட்டர் ஒலிவியினால் கற்பிக்கப்பட்டு,[2] 14ம் நூற்றாண்டில் பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவறா வரம் பற்றிய திருத்தந்தை மூன்றாம் நிக்கலசின் அறிக்கையினை திருத்தந்தை இருபத்திரெண்டாம் யோவாம் ஏற்க மறுத்தார்.[3][4][5]

விசுவாசக் கோட்பாடு

முதலில் திருத்தந்தையின் தவறா வரம் என்பதன் பொருள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாததால், பலரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைத் தொடர்பான அதிகாரப்பூர்வ போதனைகளை வழங்கும்போது திருத்தந்தை வழுவாவரம் உடையவர் என்னும் கருத்து பின்னாட்களில் ஏற்றுகொள்ளப்பட்டது.[6] இது திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் கூட்டப்பட்ட முதல் வத்திக்கான் சங்கத்தில் விசுவாசக் கோட்பாடாகவும் அறிக்கையிடப்பட்டது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads