திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவமுகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.[4] இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.[5] திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களும் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

Remove ads
பித்ரு க்ஷேத்திரம்
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.[6]
ஓவியங்கள்
பழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன
அமைவிடம்
சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன.
பாசுரம்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திரு நாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே
— திருவாய்மொழி, 9ம் பத்து 8ம் திருமொழி 5ம் பாசுரம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads