திருமங்கலம் சூத்திரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2009 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் திமுக வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் திருமங்கலம் ஃபார்முலா (திருமங்கலம் சூத்திரம்) என்ற பெயர் உருவானது.

பின்னணி

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீர இளவரசன் (ம.தி.மு.க) இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் திமுகவின் சார்பில் லதா அதியமானும் (காலஞ்சென்ற மு. சி. சோ. அதியமானின் மனைவி) போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் மு. க. அழகிரி தலைமையில் கட்சி தொண்டர்கள் பணியாற்றி லதா அதியமானை வெற்றி அடையச் செய்தனர். இந்த இடைத் தேர்தலின் போது திருமங்கலம் தொகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றிபெற்றதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தகுந்த சான்றுகள் இல்லாமையால் எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; தேர்தல் ஆணையமும் இத்தேர்தலை ரத்து செய்யவில்லை.

அதன் பின் வந்த இடைதேர்தல்களிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்று பணபட்டுவாடா நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காலபோக்கில் இவ்வாறாக வாக்களர்களுக்கு பணம் வழங்கி வாக்கு பெறும் முறைக்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டது என்று அப்போதைய ஆளும் கட்சியான திமுகவின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads