திருமாளிகைத் தேவர்
பன்னிரு திருமுறை ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமாளிகைத் தேவர் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். நவகோடி சித்தர்புரம் என அழைக்கப்படும் திருவாவடுதுறையில் சித்தஞான யோக சாதனை செய்து வந்த போகநாதரின் சீடர்களில் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரியோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.[1]
Remove ads
திருப்பதிகங்கள்
திருமாளிகைத்தேவர் தில்லைச்சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் நான்கு ஆகும்.[1]
காலம்
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜசோழன் (பொ.ஊ. 985–1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்காக தேவர் அடியார்கள் சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads