திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்
Remove ads

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் (ஆங்கிலம்: Parimala Ranganatha Perumal Temple) ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களுள் 26வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது. இந்த ஊர் மயிலாடுதுறையில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

கோயில் அமைப்பு

பரிமள ரங்கநாதர் கோயிலின் முன்புறத்தில் ஐந்து நிலை இராச கோபுரம் அமைந்துள்ளது. இந்த இராச கோபுரமானது 250 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. கோயிலின் வாயிலருகே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு சந்திரன் நீராடி சாப விமோச்சனம் பெற்றதாக தொன்மம் உள்ளது. கருவறையில் வீர சயன கோலத்தில் கிழக்கு பார்த்துப் பெருமாள் உள்ளார். பெருமாளின் முகத்தை சந்திரனும், திருவடிகளை சூரியனும், நாபிக் கமலத்தை பிரம்ம தேவரும் பூசிக்கின்றனர். தலையின் அருகே காவிரித் தாயாரும், காலருகே கங்கையும் வணங்கியபடி உள்ளனர். எமதருமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடிகளை பூசித்தபடி உள்ளனர். பெருமாளின் திருமேனியானது 12 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டதாக பச்சைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் சிலையில் பட்டு பீதாம்பரத்தின் மடிப்புகள், கை விரல் நகங்கள் என நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது.

Remove ads

விழாக்கள்

சித்திரைத் திருநாளன்று பெருமாள் புறப்பாடு, ஆடி மாதத்தில் 10 நாட்கள் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம், ஆவணி மாதத்தில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் 10 நாள் துலா பிரம்மோற்சவம், மார்கழியில் 21 வைகுண்ட ஏகாதசி உற்சவும், தை முதல் நாளில் பொங்கல் உற்சவம், பங்குனியில் 10 நாள் தேர்த் திருவிழா போன்ற விழாக்கள் கோயிலில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகின்றன.[1]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads