திருவண்ணாமலை மகாதீபம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவண்ணாமலை மகாதீபம் என்பது கார்த்திகை விளக்கீடு அன்று திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும் விழாவாகும். திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இது 10-ஆம் நாள் திருவிழா ஆகும். இம்மகாதீபம் இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" என்றும் அழைக்கபடுகிறது.
பரணி தீபம்
காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.
மகா தீபம்
தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.
இக்கொப்பரையை 1668-இல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.[1]
Remove ads
பர்வத ராஜ குலத்தினர்
இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் "செம்படவர்கள்" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுகொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.
கோவிலில் தீபம் ஏற்றுதல்
மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கம் அளித்து இன்று காட்சி அளித்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்குத் தீபம் ஏற்றுவர். அப்பொழுது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று முழக்கம் இடுவர்.
Remove ads
கிரிவலம் வருதல்
கார்த்திகை தீபத்தன்று மலைவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்குப் பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளைப் போக்கும். என்பது அந்நகர மக்களின் நம்பிக்கை.
மேற்கோள்கள்
பார்வை நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads