திருவயிந்திபுரம்

கடலூர் மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவயிந்திபுரம் அல்லது திருவயிந்திரபும் (Thiruvanthipuram) என்பது இந்தியா தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[2][3] இவ்வூர் திருவஹீந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் திருவயிந்திபுரம் திருவஹீந்திரபுரம், நாடு ...

இந்த ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப்பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் ‘திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன், அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூரில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads