திறந்த ஆட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திறந்த ஆட்டம் அல்லது இரட்டை இராசாவின் சிப்பாய் திறப்பு(Open game) என்பது 1. e4 e5 எனும் நகர்த்தல்களுடன் தொடங்கும் சதுரங்கத் திறப்பாகும். வெள்ளை தனது இராசாவின் சிப்பாயை இரு கட்டங்கள் முன்னே நகர்த்த கருப்பும் அதே போல் நகர்த்துவது திறந்த ஆட்டம் வகையாகும். 1.e4 நகர்த்தலுக்குப் பதிலாக கருப்பு e5 தவிர்த்த வேறு நகர்த்தல்களைச் செய்தால் அது அரை-திறந்த ஆட்டம் அல்லது ஒற்றை இராசாவின் சிப்பாய் ஆட்டம் எனப்படும்.
திறந்த ஆட்டம் என்பது சில வேளைகளில் செங்குத்து வரிசைகள், கிடை வரிசைகள் மற்றும் மூலை விட்டங்கள் ஆகியன திறந்திருக்கும் ஒரு சதுரங்க ஆட்ட நிலையையும் குறிக்கும். பொதுவாக அமைச்சர்கள் குதிரைகளை விட பலம் வாய்ந்தனவாக இருக்கின்றனர், ஏனென்றால் திறந்த சதுரங்கப் பலகையில் மந்திரிகளால் நீண்ட தூரத்தை கண்காணிக்க முடியும்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads