தில்லி பொது நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லி பொது நூலகம் (Delhi Public Library) இந்திய மாநிலமான டெல்லியில் உள்ள ஒரு தேசிய வைப்பு நூலகம் ஆகும் . இந்த நூலகத்திற்கு மாநிலம் முழுவதும் 37 கிளைகள் உள்ளன.
Remove ads
வரலாறு
தில்லி பொது நூலகம் 27 அக்டோபர் 1951 ஆம் நாளன்று யுனெஸ்கோ எனப்படுகின்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. நூலகத் திட்டம் 1944 ஆம் ஆண்டுக்கு முன்பே தொடங்கியதாகும். அப்போது ஜெனரல் சர் கிளாட் ஆச்சின்லெக் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ ராம்கிருஷ்ணா டால்மியா நூலகக் கட்டடத்தைக் கட்டுவதற்குத் தேவையான பெரும்பகுதி தொகையை நன்கொடையாக அளித்தபோது தொடங்கியது. பிப்ரவரி 1950 இல் இந்திய அரசாங்கம் மற்றும் யுனெஸ்கோ இந்தத் திட்டத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டன. அதன் அடிப்படையில் நூலகம் அதிகாரப்பூர்வமாக 27 அக்டோபர் 1951 ஆம் நான்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . 1951 ஆம் ஆண்டிற்கும் 1953 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில நூலகத்திற்கான கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1955 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவிலிருந்து இந்திய அரசாங்கத்திற்கு முறையாக இதன் நடவடிக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. நூலகம் அதன் ஆரம்ப நாட்களிலிருந்து மாணவ நூலகர்கள் மற்றும் சமூகக் கல்வித் தொழிலாளர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கி வருகிறது. [1]
Remove ads
வசதிகள்
தில்லி பொது நூலகம் அறிவு, தகவல் மற்றும் பண்பாட்டினைப் பரப்புவதற்கான மையமாக தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. நூலகத்தின் பணி என்பதானது நூல்களை வழங்குவதற்கான மையம் என்ற நிலையில் மட்டுமே அமைவது அல்ல என்பதும் அறிவார்ந்த முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் அதன் வாசகர்களிடையே சமூக உறவை உருவாக்குவதற்கும் அர்ப்பணித்த ஒரு வலுவான அமைப்பாகவும் வளர வேண்டும் என்று உணர்வதற்காகவும் என்பது அதிகமாக உணரப்பட்டது. அதன் அடிப்படையில் தில்லி பொது நூலகம் பொதுமக்களுக்கு வசதிகளை வழங்கி வருகிறது. கடன் அடிப்படையில் நூல்களை வாசகர்களுக்கு வழங்குதல், குறிப்புகள் எடுக்க உரிய உதவிகள் செய்தல் மற்றும் சிறப்பு சேவைகள் என்பனவே அந்த வசதிகள் ஆகும்.
Remove ads
அலுவலக நேரம்
தில்லி பொது நூலகம் காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை வாசகர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிற விடுமுறை நாள்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். உதவிக்கு 011-23962682 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நூலகம் தொடர்பான நடவடிக்கைகள், நூல் வாசிப்பு தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள் 011-23962682 என்ற எண்ணிலும், இது போன்ற நிகழ்வுகளில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள விரும்புவோர் 011-23962682 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.[2]
நூல் சேர்த்தல்
வாசகர்களுக்குத் தேவையான பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட அனைத்து நூல்களுக்கும், மிகச் சிறந்த பதிப்பகங்களுக்கும் தில்லி பொது நூலகம் உரிய வழங்காணைகளை அனுப்பி நூல்களைப் பெற்று வழங்கி வருகிறது. சில நேரங்களில் சில நூல்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அல்லது நூலகச் சேகரிப்பில் அவை விடுபட்டிருக்கலாம். அவ்வாறான சூழலில் வாசகர்கள் அத்தகைய நூலைப் பற்றிய பரிந்துரையை, உரிய நூல், டிவிடி, சிடி ஆகியவற்றை குறிப்பிட்டு நூலகத்திற்குக் கடிதம் அனுப்பலாம். [2]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads