திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் (Dihang-Dibangbiosphere reserve) யுனெஸ்கோவால் உருவாக்கப்பட்ட மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere Programme) என்ற திட்டத்தின் கீழ் 1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகமாகும். மௌலிங் தேசியப் பூங்கா, திபாங்க் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.அருணாச்சலப் பிரதேசத்தில் 5112 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகத்தில் மைய மண்டலப் பகுதி 4095 ச கி. மீ மற்றும் தாங்கல் மண்டலமாக 1017 சதுர கி.மீ வரை உள்ளது.திபாங்க் பள்ளத்தாக்கு, மேல் சையாங் மற்றும் மேற்கு சயாங் வரை கிழக்கு இமயமலை மற்றும் மிஷ்மி மலைத்தொடர்களை உள்ளடக்கியதாகும். கடல் மட்டத்திலிருந்து இக்காப்பகம் கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்தில் உள்ளது. திஹாங்-திபாங் மலைத்தொடர் முதல் கோர்ஜெஸ் ஆறுவரை வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகளும் மிதவெப்பமணடலம், ஆல்பைன் மற்றும் நிரந்தரப் பனி சூழ்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன.[1]
Remove ads
தாவரங்கள்
உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளப்பகுதியாக விளங்கும் இக்காப்பகத்தில் 1500 பூக்கும் தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சயாத்தியா, லிவிஸ்டோனா மற்றும் கோப்டிஸ் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 8க்கும் மேற்பட்ட வன வகைகள் உள்ளன.[2]
விலங்குகள்
கிழக்கு இமயமலைக்கே உரித்தான பல வகை உயிரினங்கள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. மேலும் உலகின் அதிக அழிவாய்ப்புள்ள உயிரினங்கள் இங்குள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்திப்பூச்சிகள் உட்பட 45 வகையான பூச்சியினங்களும் 195 வகையான பறவையினங்களும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு வகையான பறக்கும் அணில்கள் இப்பகுதிக்கே உரித்தான ஒரு உயிரினமாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.[3][4] சிறுத்தை, பனிச்சிறுத்தை, பொன்பூனை, காட்டுப்பூனை மற்றும் சிறுத்தை பூனை போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.[5] 1991இல் 4149 கி.மீ2 பரப்பளவு உள்ள மேல் திபாங்க் பள்ளத்தாக்கு பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[6]
Remove ads
பழங்குடியினர்
மிகப்பெரிய பரப்பளவில் பரவியுள்ள இக்காப்ப்பகம் உலகில் மிகக் குறைந்த மக்கள் வாழுமிடமாகும். இங்கு சுமார் 10,000 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். பாரிஸ், படாமா, பாங்கி, சிமோங், கர்கோ, ஆசிங், டங்கம், கோம்கர், மில்லங், டால்பிங், மெம்பா, காம்பா, ஆதிமிஷ்மி போன்ற ஆதி, புத்த மற்றும் மிஷ்மி பழங்குடி மக்கள் மிகுந்து வாழும் இக்காப்பகம் காடுகள் மிகுந்து காணப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads