தி. ஜ. ரங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி பெற்று சிலகாலம் கர்ணமாக வேலை பார்த்தார். திண்ணைப் பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா, மளிகைக்கடைச் சிற்றாள் என பல வேலைகள் பார்த்தார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுந்தரவல்லி. 1916 இல் அவர் படித்த ’ஐரோப்பிய சரித்திரம்’ என்ற தமிழ் நூலின் ஐந்து பாகங்களும் தான் தனக்குத் தலைமை ஆசான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய முதல் கட்டுரை ஆனந்தபோதினி இதழிலும் கவிதை ஸ்வராஜ்யா இதழிலும் 1916 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ’சமரபோதினி’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, ஊழியன், சுதந்திரச் சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா ஆகிய இதழ்களில் பணியாற்றினார். ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தார். ‘பாப்பா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
Remove ads
படைப்புகள்
(பட்டியல் முழுமையானதல்ல)
சிறுகதைத் தொகுப்புகள்
- சந்தனக்காவடி (1938)
- நொண்டிக்கிளி (1949)
- காளிதரிசனம் (1951)
- மஞ்சள் துணி (1944)
- விசைவாத்து(1960)
கட்டுரைத்தொகுதி
- பொழுதுபோக்கு (1937)
- எப்படி எழுதினேன் (1943)
- ஆஹா ஊஹூ (1946)
- வளர்ச்சியும் வாழ்வும் (1956)
- மொழி வளர்ச்சி (1957)
- வீடும் வண்டியும் (1958)
- தீனபந்து ஆன்ட்ரூஸ் (1940) (வாழ்க்கை வரலாறு)
- புதுமைக்கவி பாரதியார் (1940) (வாழ்க்கை வரலாறு)
- புகழ்ச்செல்வர் (1947) (வாழ்க்கை வரலாறு)
- கோயரிங் (1942) (வாழ்க்கை வரலாறு)
- இது என்ன உலகம் (1950)
- யோசிக்கும் வேளையில்
மொழிபெயர்ப்புகள்
- கூண்டுக்கிளி (ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய - நாடகம்) (1941)
- அபேதவாதம் (பொதுவுடைமைச் சித்தாந்தம் குறித்த ராஜாஜியின் ஆங்கில உரை)
- அட்லாண்டிக் சாசனம் (கட்டுரை) (1944)
- ஒரே உலகம் (வெண்டல் வில்கீ - கட்டுரை நூல்) (1945)
- லெனின் சரித்திரக் கதைகள் (1946)
- புது நாள் (மிகைல் ஜோஷென்கோ- புதினம்) (1955)
- அரசியல் நிர்ணய சபை (நேரு - உரை) (1947)* காந்தி வாழ்க்கை (லூயிஸ் பிஷர் - வாழ்க்கை வரலாறு) (1962)
குழந்தை இலக்கியப் படைப்புகள்
- ரோஜா பெண் (தழுவல் கதைகள்) (1955)
- காந்தி வாழ்க்கை (லூயிஸ் பிஷர் - வாழ்க்கை வரலாறு) (1962)
- பாப்பாவுக்குப் பாரதி (கட்டுரை) (1962)
- பாப்பாவுக்குக் காந்தி (கட்டுரை) (1964)
- பாப்பாவுக்குக் காந்தி கதைகள் (1969)
- குமாவுன் புலிகள் (1958)
- அலமுவின் அதிசய உலகம் (லூயி கரோல் - புதினம்)
- வண்ணாத்திப்பூச்சி
- சமர்த்து மைனா
Remove ads
படைப்புகள் நாட்டுடைமையாக்கம்
தி.ஜ.ர.வின் படைப்புகளை தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 - 7 ஆம் நிதியாண்டில் 600 ஆயிரம் ரூபாயை அவர்தம் கால்வழியினருக்குப் பரிவுத்தொகையாக வழங்கி நாட்டுடைமை ஆக்கியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads