தீப்பாறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீப்பாறை (இக்னீயஸ் பாறை) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது. தீப்பாறைகளே முதலில் தோன்றியவை ஆகும். உருகிய பாறைக் குழம்பு பளிங்காக்கத்துடனோ அல்லது பளிங்காக்கம் இல்லாமலோ இறுகித் திண்மம் ஆவதால் தீப்பாறை உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.
- புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 75 சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை. பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.

Remove ads
தீப்பாறையின் வகைகள்
- உந்துப்பாறைகள்
- தலையீடு பாறைகள்
உந்துப்பாறை உருவாக்கம்
உந்துதலின் காரணமாக புவி மேற்பரப்பில் மாக்மா (பாறைக் குழம்பு) வழிந்தோடுகிற பொழுதோ அல்லது பெருங்கடல் தரையில் வழிந்தோடுகிற பொழுதோ, குளிர்ந்து திடமாகிற பாறை "உந்துப்பாறை" எனப்படும். பசால்ட் எனப்படும் எரிமலைப்பாறைகள் உந்துப்பாறை வகையைச் சார்ந்தவை. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் பாறைகளால் ஆனவையே.
Remove ads
தலையீடு பாறைகள்
புவியின் உள்ளேயேவழிந்து குளிர்ந்து திடமாகிற மாக்மா "தலையீடு பாறை" எனப்படும். இப்பாறைகள் ஏற்கனவே அமைந்துள்ள படிவுப்பாறைகளின் அடுக்குகளுக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற மாக்மாவால் உருவாகின்றன. இவை உருவத்தில் மிகப் பெரியதாகவும் , விரிப்பு போன்ற அமைப்பிலும் இருக்கும். கிரானைட் பாறைகள் தலையீடு பாறை வகையைச் சார்ந்தவை.
தலையீடு பாறை வகைகள்
- இடைப்பாறை(DYKE),
- சமகிடைப்பாறை (SILL),
- கும்மட்டப்பாறை (LACCOLITH),
- நீள்வரிப்பாறை(BATHOLITH)
- எரிமலைக் குழாய் (VOLCANIC PIPE).
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads