தீவினைச் சிக்கல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமய மெய்யியலில், தீவினைச் சிக்கல் (ஆங்கிலம்: Problem of evil) என்பது கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது என்ற சிக்கல் ஆகும். பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பது ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்தருவது இறையிலின் ஒரு முக்கிய துறையாக இருக்கிறது.

உலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads