துங்கு இரண்டாம் அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துங்கு இரண்டாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Rahman Kedua; ஆங்கிலம்: Second Rahman Cabinet; சீனம்: 第二次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை ஆகும். [1]
மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, மலாயாவின் முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார்.
Remove ads
பொது
1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.
துங்குவின் இரண்டாம் அமைச்சரவை 22 ஆகஸ்டு 1959 அன்று பதவியேற்றது. துங்குவின் முதலாம் அமைச்சரவையில் பதவி வகித்த அனைத்து அமைச்சர்களும்; இரண்டாம் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
கெடா தெங்கா தொகுதி
அவர்களில் மலேசிய சீனர் சங்கத்தை சார்ந்த துன் எச். எஸ். லீ மட்டும் 1959 தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அவர் துங்குவின் இரண்டாம் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
1959 செப்டம்பர் 30-க்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட கெடா தெங்கா தொகுதியில் போட்டியிட்ட முகமது கிர் ஜொகாரி அவர்களின் பெயரும் அமைச்சரவை பட்டியலில் இருந்து தவிர்க்கப்பட்டது.
Remove ads
இரண்டாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்
மலேசியாவின் முதல் பிரதமர் (அப்போதைய மலாயா கூட்டமைப்பின் பிரதமர்) துங்கு அப்துல் ரகுமானின் இரண்டாவது அமைச்சரவையின் உறுப்பினர்களின் பட்டியல்:
துணை அமைச்சர்கள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads