துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

துப்பகுல கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் இவர் செஞ்சி ஐ ஆண்ட நாயக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணதேவராயர் படைத் தளபதியான கோனேரி வையப்ப நாயக்கரின் மகன். [1] [2] [3]

செஞ்சிக் கோட்டை

இவர் ஆட்சி காலத்தில் செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது. அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக் கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார். [4] [5]

அறப்பணிகள்

செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம வேங்கடரமணர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில்கள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மலர்த் தோட்டம் ஆகியவை பெத்த கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டுவிக்கப்பட்டன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் இரண்டாம் குலோத்துங்க சோழன் கோவிந்தராசப் பெருமாளின் சிலையை அகற்றிவிட்ட பிறகு அங்கு மீண்டும் சிலையை அமைத்துக் கொடுத்தார்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads