தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளம் (Thumba Equatorial Rocket Launching Station) என்பது இந்திய விண்வெளித்தளம் ஆகும்.
வரலாறு
தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளம் 1963ஆம் ஆண்டு நவம்பர் 21-ல் நிறுவப்பட்டது.[1] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) இம்மையம் நிர்வகிக்கப்படுகிறது. இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பிரதான நிலப்பரப்பின் தெற்கு முனைக்கு அருகில், பூமியின் காந்த சரிவுக்கு மிக அருகில் உள்ளது. இது தற்போது ஏவூர்திகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]
தற்பொழுது விண்வெளி அருங்காட்சியகமாகச் செயல்படும் செயின்ட் லூயிசு உயர்நிலைப் பள்ளியில் முதல் ஏவூர்தி தயார்செய்யப்பட்டது.[2] உள்ளூர் ஆயர், அருட்தந்தை பீட்டர் பெர்னார்ட் பெரியரா, திருவனந்தபுரம் பிஷப், வின்சென்ட் விக்டர் டெரீரே (பெல்ஜியம் நாட்டவர்) மற்றும் மாவட்ட ஆட்சியர் மாதவன் நாயர் ஆகியோர் கடலோர மக்களிடமிருந்து 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.[3] ஆயர் அருட்தந்தை பெரேரா, தனது அறையினையும் பிரத்தனை கூடத்தினையும் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் நோக்கங்களுக்காக வழங்கி உதவினார்.[4] பின்னர் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இலட்சுமி என். மேனன் தில்லியில் இத்திட்டத்திற்கு அலுவல் தொடர்பான பணிகளில் உதவினார்.[5] எச். எசு. எஸ். மூர்த்தி இந்நிலையத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[6]
ஏவுதலுக்கான ஏவூர்தி தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டது. முதல் ஏவுதலுக்கு அடுத்த நாளில் நடந்த ஜான் எப். கென்னடியின் படுகொலை காரணமாக இந்த நிகழ்வு உலகளாவிய ஊடக கவனத்தைப் பெறவில்லை.
Remove ads
அமைவிடம்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 8°32'34" N மற்றும் 76°51'32" E இல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய மீனவ கிராமம் தும்பா ஆகும்.[7] பாக்கித்தான், சீனா, ஆப்கானித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து தொலைவில் உள்ளது.[8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads