தும்பிக்கை

யானையின் முகத்திலிருந்து நீண்டு வளர்ந்திருக்கும் மேல் உதடுடன் சேர்ந்த மூக்கு From Wikipedia, the free encyclopedia

தும்பிக்கை
Remove ads

தும்பிக்கை என்பது யானையின் முன் பகுதி உடல் உறுப்பில் முகத்திலிருந்து நீண்டு வளர்ந்திருக்கும் மேல் உதடுடன் சேர்ந்த மூக்கும் ஆகும். இது மீள்விசைத் தன்மை கொண்டது. இவ்வுறுப்பு வேறு எந்த உயிரினங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு காணபடாத அதிசயமே யானைகளுக்கு மட்டுமே சிறப்பாகக் உள்ளது. தும்பிக்கையானது மொத்தம் 1,50,000 தசைநார்களால் உருவானது. சின்னஞ்சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை யானையால் தும்பிக்கை கொண்டு தூக்க முடியும். உண்கையில் மரக்கிளைகளை எட்டிப் பறிக்கவும் மரப்பட்டைகளை உரிக்கவும் உணவு உட்கொள்ளவும் நீர் அருந்தவும் யானைகள் தும்பிக்கையை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன.

Thumb
தர்பூசணிப் பழத்தைத் தும்பிக்கையின் உதவியால் உண்ணும் ஆசிய யானை

ஆப்பிரிக்க யானைக்கு பிறக்கும்போது அதன் தும்பிக்கையில் 87 சுருக்கங்கள் இருக்கும். அதுவே வளர்ந்த பிறகு 109 ஆக அதிகரிக்கும். அந்தச் சுருக்கங்கள் அதன் வலிமையின் அடையாளம் எனப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளைவிட ஆசிய யானைகளின் தும்பிக்கையில் 1.5 மடங்கு அதிக சுருக்கங்களும், மடிப்புகளும் கொண்டிருக்கும்.[1] ஆப்பிரிக்க யானைக்கு தும்பிக்கையில் இரு விரல்களும் ஆசிய யானைக்கு தும்பிக்கையின் மேற்புறம் ஒரு விரலும் இருக்கும். தும்பிக்கை காயம்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ யானையால் உயிர்வாழ இயலாது.[2]

Remove ads

துணை நூற்பட்டியல்

  • ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம் : மலைபடு கடாம் பதிப்பகம். p. 117.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads