துராந்து எல்லைக்கோடு

From Wikipedia, the free encyclopedia

துராந்து எல்லைக்கோடு
Remove ads

துராந்து எல்லைக்கோடு (Durand Line (பஷ்தூ: د ډیورنډ کرښه) ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பிரிக்கும் 2430 கி.மீ. நீளம் கொண்ட பன்னாட்டு எல்லைக் கோடாகும். 1878–1880ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போருக்குப் பின்னர்

Thumb
ஆப்கானித்தான் - பாகிஸ்தானைப் பிரிக்கும் துராந்து எல்லைக்கோடு, சிவப்பு நிறத்தில்

இந்த எல்லைக்கோடு முதலில் 1896ல் பிரித்தானிய புவியியல் அறிஞரான் சர் மோர்டிமர் துராந்து என்பவரால் வரையறுக்கப்பட்டதால், இந்த எல்லைக்கோட்டிற்கு துராந்து எல்லைக்கோடு எனப்பெயராயிற்று.

12 நவம்பர் 1893ல் பிரித்தானிய இந்தியா அரசும் மற்றும் ஆப்கானிய அமீர் அப்துர் ரக்மானும் செய்து கொண்ட கந்தமாக் உடன்படிக்கையின் படி துராந்து எல்லைக்கோட்டை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

துராந்து எல்லைக்கோடு வரையறுத்தப் பின்னர் ஆப்கானித்தான் தன்னாட்சியுடன் ஆட்சி செய்தாலும், அதன் வெளியுறவு விவகாரங்களை பிரித்தானிய இந்திய அரசே நிர்வகித்தது.[1][2][3] துராந்து எல்லைக்கோட்டு தொடர்பான ஒப்பந்தப்படி, ஆப்கானித்தான், ருசியாவிற்கும், பிரித்தானிய இந்தியாவிற்கும் இடையே போர் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[4]

மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போருக்குப் பின்னர் செய்து கொண்ட ஆங்கிலேய - ஆப்கான் ஒப்பந்தத்தின் படி, 1919ல் துராந்து எல்லைக்கோட்டை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான் - ஆப்கானித்தானிற்கும் இடையே எல்லையாக உள்ளது. துராந்து எல்லைக்கோட்டு அருகே பாகிஸ்தானின் மேற்கு மற்றும் வடக்கு பலூசிஸ்தான், கைபர் பக்துன்வா மாகாணங்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வடக்கு நிலங்கள் மற்றும் ஆப்கானித்தானின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் உள்ளது.

துராந்து எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தலிபான்களின் ஆதிக்கத்தால், பாகிஸ்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் உள்ளிட்ட பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகள் உலகின் ஆபத்தான எல்லைபுறங்களில் ஒன்றாக உள்ளது.[5][6][7][8]

பாகிஸ்தானின் மேற்கில் உள்ள துராந்து எல்லைக்கோட்டை ஆப்கானிய அரசு இன்றளவிலும் அங்கீரிக்கவில்லை.[9][10][11][12][13][14]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads