துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம் (Accuracy and precision) என்பவை அறிவியல், பொறியியல், தொழில் மற்றும் புள்ளியியல் துறைகளின் அளவீடு முறைமையில் (measurement system) விவரிக்கப்படும் இரண்டு வார்த்தைகள் ஆகும்.[1][2][3]
ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது எண்ணிக்கையை அளக்கும்போது அந்த அளவு, உண்மையான மதிப்புடன் எவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கிறது என்பதே துல்லியம் (Accuracy) ஆகும்.
படிநிலைகள் மாறாத சுழலில் அடுத்தடுத்து எடுக்கப்படும் அளவீடுகள், ஒரேமாதிரியான முடிவுகளைத் தருவதில் எப்படி இருக்கிறது என்பதே வழுவாத நுண்ணியம் (Precision) ஆகும். மீளவுண்டாக்கப்படுதன்மை (Reproducibility) மற்றும் திரும்பச்செய்தகுமை (Repeatability), வழுவாத நுண்ணியத்தின் மற்ற பெயர்கள் ஆகும். மீளவுண்டாக்கப்படுதன்மை மற்றும் திரும்பச்செய்தகுமை என்பவை பேச்சு வழக்கில் ஒரே பொருளுடையதாக இருந்தபோதும் விஞ்ஞானமுறையில் பார்க்கும்போது வேறுபாடு இருக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads