தெனாலிராமன் (2014 திரைப்படம்)

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தெனாலிராமன் (2014 திரைப்படம்)
Remove ads

தெனாலிராமன் 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம். இந்த திரைப்படம் 3 ஆண்டிற்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார்.

விரைவான உண்மைகள் தெனாலிராமன், இயக்கம் ...

டி இமான் இசையமைப்பில் வாலி, புலமைப்பித்தன், நா. முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதுயுள்ளார்கள். ராம்நாத் செட்டி ஒளிப்பதிவாளராகவும், எம். பிரபாகர் கலை இயக்குநராகவும் பணியாற்றினார்.

Remove ads

கதை சுருக்கம்

வெளியுலகம் தெரியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மன்னனுக்கு அனைத்தையும் புரிய வைப்பவனே இந்த ‘தெனாலிராமன்’. விகட நகரத்தை ஆளும் மன்னனின் (வடிவ«லு) அரசவையில் இருக்கும் 9 ‘நவரத்தின மந்திரிகள்’ மற்றும் ராஜதந்திரி (ராதாரவி) ஆகியோர் மக்கள் நலத்திட்டப் பணிகளை கவனித்து வருகின்றனர். மன்னனை ஏமாற்றி, சீன வியாபாரிகளை விகட நகரத்திற்கு வியாபாரம் செய்ய அழைத்து வருவதற்கு 9 மந்திரிகளுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார் ராதாரவி. அதில் ஒருவர் மன்னனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்க அவரை கொலை செய்து இயற்கை மரணம்போல் காட்டுகிறார்கள். அரசவையில் காலியாகும் அந்த மந்திரிப் பதவியை தன் சமயோஜித புத்திக்கூர்மையால் கைப்பற்றுகிறார் தெனாலிராமன் (வடிவேலு). உண்மையில் தெனாலிராமன் அரசவையில் இடம்பிடித்தது ஆட்சிபுரிய அல்ல... மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி. ஆனால், அரண்மனைக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது.... இத்தனைக்கும் காரணம் மன்னன் அல்ல, அந்த மந்திரிகள்தான் என்று! இதன் பிறகு ‘தெனாலிராமன்’ என்ன செய்தார் என்பது மீதிப்படம்.

Remove ads

நடிகர்கள்

இயக்குநர்

வடிவேலுவுக்கு இரட்டை வேடக் கதையை அமைத்து, ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads