தென்கிழக்காசிய உயர்க்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

தென்கிழக்காசிய உயர்க்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு
Remove ads

தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பு (மலாய்:Persatuan Institusi Penyelidikan Tinggi Asia Tenggara; ஆங்கிலம்:Association of Southeast Asian Institutions of Higher Learning என்பது ஓர் அரசு சாரா கூட்டமைப்பு ஆகும்.

Thumb
தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பின் ஓர் உறுப்பு கல்விக் கழகமான இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தின் சின்னம்

தென்கிழக்காசியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தங்களின் சொந்த முயற்சிகளின் மூலமாக ஆராய்ச்சிகள் செய்வது; கற்பித்தல் மற்றும் பொதுச் சேவைகளில் தனித்துவத்தை அடைவது; தங்களுக்குள் உதவிகள் செய்து கொள்வது; போன்ற கல்விசார் திட்டங்களுக்காக, 1955 சனவரி மாதம் தாய்லாந்து, பாங்காக் மாநகரில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஆகும்.[1]

இந்தக் கூட்டமைப்பு, தென்கிழக்காசியாவின் பழமையான பிராந்திய அமைப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாங்காக் சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் நின்னாட் ஓலன்வொரவுத் என்பவர் ஆவார்.[2]

Remove ads

உறுப்பினர்கள்

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பில் 25 நாடுகளைச் சார்ந்த 246 கல்வி நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றுள்ளன.[3]

மேலதிகத் தகவல்கள் நாடு, கல்விக் கழகங்களின் எண்ணிக்கை ...
Remove ads

தோற்றுநர்கள்

  1. சர் நிக்கலஸ் அத்திகேல், இலங்கைப் பல்கலைக்கழகம்
  2. மார்சல் முனி எம். விஜயந்த் ரங்சரிசட், சுலலாங்கோர்ன் பல்கலைக்கழகம்
  3. லின்ட்சே ரைட், ஆங்காங் பல்கலைக்கழகம்
  4. பாடர் ஜோன், இந்தோனேசியப் பல்கலைக்கழகம்
  5. சர் சிட்னி கெய்ன், மலாயா பல்கலைக்கழகம்
  6. விடல் ஏ. டான், பிலிப்பீன்சு பல்கலைக்கழகம்
  7. இத்தின் அவுங், யங்கோன் பல்கலைக்கழகம்
  8. நுவேன் குவாங் திரின், வியட்நாம் தேசிய பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads