தென்னிந்திய திருச்சபை-தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தென்னிந்திய திருச்சபையின் மறைமாவட்டங்களில் ஒன்றாகும். தென்னிந்திய திருச்சபை என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை உள்ளடக்கிய திருச்சபைகளின் கூட்டமைப்பாகும். இதில் மொத்தம் 24 திருமண்டலங்கள் (டயோசீசன்) உள்ளன. அவற்றில் தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் திருச்சபை, சாயர்புரம் போப் திருச்சபை, நாசரேத் மெர்க்காசிஸ் திருச்சபை, கோவில்பட்டி ரேக்லாண்ட் திருச்சபை, சாத்தான்குளம் திருச்சபைமற்றும் மெய்ஞானபுரம் திருச்சபை உள்ளிட்ட 6 சபைமன்றங்களையும், 106 சேகர மன்றங்களையும் உள்ளடக்கியது இந்த தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் ஆகும். இத்திருமண்டலத்தின் பேராலயமாக தூய யோவான் பேராலயம், நாசரேத் விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தென்னிந்திய திருச்சபை, அமைவிடம் ...


Remove ads

வரலாறு

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம் 2003 ஆம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்திலிருந்து பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

திருமண்டல பேராயர்கள்

  • அருட்திரு. டாக்டர் - J.A.B ஜெபசந்திரன் (2006-2013)
  • அருட்திரு. S.E.C. தேவசகாயம் (2014 - 2022)

இத்திருமண்டலத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக பேராயர் யாரும் இன்னமும் நியமிக்கப்படாமல், பொறுப்பு பேராயர்கள், நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் மற்றும் சினாட் மூலம் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுமே நிர்வகித்து வருகின்றனர்.[1] [2] [3]

தூத்துக்குடி - நாசரேத்து திருமண்டல புள்ளியியல்

  • மொத்த ஞானஸ்நானம் பெற்றவர்கள் : 1,62,858
  • மொத்த  திருசபையார் எண்ணிக்கை  : 1,17,898
  • மொத்த போதகர்கள் எண்ணிக்கை  : 109
  • மொத்த எண்ணிக்கை : 513
  • மொத்த தேவாலயங்களில் எண்ணிக்கை  : 104
  • மொத்த சபைகளின் எண்ணிக்கை  : 6
  • மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை  : 44
  • மொத்த தொடக்க பள்ளிகளின் எண்ணிக்கை : 242

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads