தெப்பத் திருவிழா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெப்பத் திருவிழா (Theppotsavam) என்பது இந்து சமய கோயில்களின் குளங்களில் நிகழ்த்தப்படும் ஒரு திருவிழாவாகும்.[1] இத்திருவிழா நாளில் இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தினைச் சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கொரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். தெப்போற்சவம், தெப்ப உற்சவம், மிதவைத் திருவிழா என்ற வேறு பெயர்களாலும் இத்திருவிழா அழைக்கப்படுகிறது.
சித்திரை மாதத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கோயில்களில் இந்து மத திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக, கோவில்களின் முக்கிய சிலை அலங்கரிக்கப்பட்டு, கோவில் குளம் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
Remove ads
சொல்லிலக்கணம்
தெப்பம் என்பது படகினைக் குறிக்கின்ற ஒரு சொல்லாகும்.[2]
தெப்பம் உருவாக்கம்
தெப்பத்தின் அடிப்பகுதியாக காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும், மரங்களையும் கட்டித் தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள் மற்றும் அலங்காரப் பொருள்களை இணைக்கின்றார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் தெப்பதிருவிழா நடைபெறுவதால் வண்ண மின் விளக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது. சித்திரத் தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து குளத்தில் வலம் வருகிறார்கள்.
Remove ads
நம்பிக்கை
பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவினின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத்தருவதே இவ்விழாவின் பின்னணியாகும்.
- தெப்பத்திருவிழா கொண்டாடப்படும் சில கோவில்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads