தேசிய ஆயுர்வேத நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய ஆயுர்வேத நிறுவனம் (National Institute of Ayurveda) என்பது இந்தியாவில் ஆயுர்வேத துறையில் கற்பித்தல், மருத்துவப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தரமான நோயாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் புதிய பிரிவின் கீழ் தோன்றிய பல்கலைக்கழகமாகக் கருதப்படும் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் 1976ஆம் ஆண்டு செய்ப்பூரில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக நிறுவப்பட்டது. 13 நவம்பர் 2020 அன்று டி-நோவோ பிரிவின் கீழ் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியால் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.[2][3] 1976-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டில் அமித் துவாவின் வழிகாட்டுதலின் கீழ், ஆவணங்கள் தொகுக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக நாடு முழுவதும் நிறுவப்பட்ட ஒன்பது தேசிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்[4] இந்த நிறுவனம் இளநிலை ஆயுர்வேத மருத்துவ பட்டம், முதுநிலை ஆயுர்வேதம்) மற்றும் முனைவர் பட்டம் (ஆயுர்வேதம்) 14 சிறப்புப் பிரிவுகளில் வழங்குகிறது. இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அரசால் அரசாங்க ஆயுர்வேதக் கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் இது 1976 ஆம் ஆண்டில் தேசிய ஆயுர்வேத நிறுவனமாக மாற்றப்பட்டு இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[5]
Remove ads
மேலும் பார்க்கவும்
- பஞ்சகர்மா தேசிய ஆராய்ச்சி நிறுவனம்
- அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், டெல்லி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads