தேசிய இடைக்காலப் பேரவை

From Wikipedia, the free encyclopedia

தேசிய இடைக்காலப் பேரவை
Remove ads

லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக " புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று "தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக" அறிவித்தது.[4][5][6]

விரைவான உண்மைகள் தேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு)المجلس الوطني الانتقالي al-majlis al-waṭanī al-intiqālī, தலைநகரம் ...

மார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.

Remove ads

பன்னாட்டு உறவு

Thumb
  லிபியா
  லிபியாவின் சட்டபூர்வ அரசாக தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்றுக்கொண்ட நாடுகள்
  லிபியாவின் ஐ.நா இடத்தைப் பெற வாக்கெடுப்பு நடக்கும்வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்
  தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்க மறுக்கும் நாடுகள்

சூலை 2011இல் பன்னாட்டு உறுப்பினர்கள் அடங்கிய லிபியா தொடர்புக் குழுவினர் "லிபியாவின் சட்டபூர்வ அரசமைப்பாக" தேசிய இடைக்காலப் பேரவையை அறிவித்தது.[9][10] அரபு நாடுகள் கூட்டமைப்பு [11] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்.[12] அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 16, 2011 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க வாக்களித்தது.[8]

லிபியாவின் அரசராக கருதப்படும் முகமது எல் செனுசி இப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.[13]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads