தேசிய பஞ்சாலை கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய பஞ்சாலை கழகம் (National Textile Corporation) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தில் பல பஞ்சாலைகள் உள்ளன. 1968ல் பல்வேறு காரணிகளால் நலிவடைந்து இயங்காமல் இருந்த 16 பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து தனியாரிடமிருந்து இந்திய ஜவுளிதுறை அமைச்சகம் தத்தெடுத்து இயக்கியது. பின்னர் படிப்படியாக 1973ல் இதன் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது. 1974ல் நலிவுற்ற பஞ்சாலைகள் தேசியமமாக்கல் சட்டம் 1974ன் கீழ் இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது.

Remove ads

வளர்ச்சி

இந்நிறுவனம் அரசு உதவியுடன் புத்துயுரூட்டி, நவீனமயமாக்கப்பட்டு சீரான வளர்ச்சியடைந்து மேலும் இதன் எண்ணிக்கை 1995ல் 119 ஆக உயர்ந்தது. இதற்கு 9 மண்டல அலுவலகங்கள் உள்ளன; இதன் மத்திய கட்டுப்பாட்டு அலுவலகம் தில்லியிலும் உள்ளது.

நலிவும் நவீனமயமாக்கலும்

இந்தியாவில் ஜவுளித்துறை அபரிதமான வளர்ச்சியால் அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட இயலவில்லை. மேலும் நலிவடைந்ததால் இந்நிறுவனம் 77 பஞ்சாலைகளை கதவடைப்பு செய்தது. 9 மண்டல அலுவலகங்களும் மத்திய கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது மீண்டும் 18 பஞ்சாலைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்பு

தேசிய பஞ்சாலை கழகம் அலுவலக இணையதளம் பரணிடப்பட்டது 2011-12-31 at the வந்தவழி இயந்திரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads