தேசிய புத்தக அறக்கட்டளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust (NBT) என்பது ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக 1957 ல் நிறுவப்பட்டது. இது இப்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் குறைந்த கட்டணத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னாட்சி அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. [1] இவர்களின் அண்மைய வெளியீடுகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. மலிவான விலையில் நல்ல புத்தகங்கள் என்ற குறிக்கோளுடன், புத்தகங்களைத் தயாரித்தல், வாசிப்பை ஊக்குவித்தல், நூலாசிரியர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உதவுதல், குழந்தை இலக்கியம் வளர்த்தல் ஆகியன இதன் கடமைகள். இது பல இந்திய மொழிகளில் குழந்தைகள் உட்பட பல்வேறு வயது உடையவர்களுக்கான புத்தகங்களை வெளியிடுகிறது.

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads