தேமாஜி மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேமாஜி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும்.இது அருகில் உள்ள லகீம்பூர் மாவட்த்தில் இருந்து, 14 அக்டோபர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1]
பெயர்க்காரணம்
இந்த மாவட்டத்தின் பெயர் அசாமிய மொழியில் வெள்ளம் என்று பொருள் தரும் தால் மற்றும் விளையாட்டு என்று பொருள் தரும் தேமாளி என்ற இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது.
அமைப்பு
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தேமாஜி நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 3217 சதுர கிலோமீடராகும் [2] இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலமும் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் தின்சுகியா மாவட்டமும், தெற்குப் பகுதியில் திப்ருகர்ஹ் மாவட்டமும், மேற்குப் பகுதியில் லகீம்பூர் மாவட்டமும்,எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு தேமாஜி, சிலாபதர், சிசி போர்காவோன் மற்றும் ஜோனை.இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]
Remove ads
மக்கள்தொகை ஆய்வு
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 688,077 பேர் உள்ளனர். 20.3 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 949 ஆகவும், மக்களின் கல்வியறிவு 69.07 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 213 ஆகவும் உள்ளது.[4]
சுற்றுலாத் தளங்கள்
1996 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் பர்டோய்பும்-பீல்முக்ஹ் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. [5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads