தேர்முட்டி மண்டபம், மதுரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேர்முட்டி, மதுரை மாநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு சன்னதி எதிரில் அமைந்த கீழமாசி வீதியில் உள்ளது. இது மீனாட்சியம்மன் மற்றும் சொக்கநாதர் தேர்களை நிறுத்தி வைக்கப்படும் இடமாகும். தேர்முட்டி மண்டபத்தில் உள்ள மீனாட்சியம்மன் மற்றும் சுவாமிக்கான இரண்டு தேர்கள் அழகிய மரச்சிற்பங்களுடன் கூடியது. மதுரை சித்திரைத் திருவிழாவின் போது தோரோட்டத் திருவிழாவிற்கு தேர்முட்டி மண்டபத்தில் உள்ள அலங்காரம் செய்யப்பட்ட இரண்டு தேர்களில், மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் அமர்ந்து, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளின் வழியாக மதுரை நகரை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

சித்திரைத் திருவிழா முடிந்த பின் இரண்டு தேர்களையும் தேர்முட்டியில் தனித் தனியாக பைபர் கண்ணாடிகளால் பாதுகாப்பாக மூடி வைப்பர்.
Remove ads
படக்காட்சிகள்
- சுவாமி தேர்
- தேர்முட்டியில் அலங்கரிக்கப்படும் மீனாட்சியம்மன் தேர்
- பூத கணங்கள்
- மன்மதன் - சிவனின் தொடையில் பார்வதி - நடராஜர்
- தேரின் மரச்சிற்பங்கள்
- தேரின் சக்கரங்கள்
- தேரின் மரச்சிற்பங்கள்
- பிள்ளையார் - முருகன்
- பைபர் கண்ணாடிகளால் பாதுகாப்பாக உள்ள தேர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads