தேவி மகாத்மியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவி மகாத்மியம் (Devi Mahatmyam), இதனை துர்காசப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1] தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. [2][1] தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிக முக்கியமானதாக உள்ளது.[3][4] [5]



தேவி மகாத்மியம் நூல், தேவியானவள் துர்கை, சண்டி போன்ற பல வடிவங்கள் எடுத்து மகிசாசூரன் போன்ற கோரமான தீய அரக்கர்களை போரில் வீழ்த்தும் கதைகளை கூறுகிறது. [6][7][8] அமைதிக் காலங்களில் தேவி இலக்குமியாகவும், சரசுவதியாகவும் காட்சியளிக்கிறாள்.[9]
தேவி மகாத்மியம் நூல், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் நேபாளத்திலும் பிரபலமாக உள்ளது.[10] துர்கா பூஜையின் போது தேவி மகாத்மிய நூலின் சுலோகங்கள் துர்கை கோயில்களில் பாடப்படுகிறது.[11].[12][13]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கூடுதல் வாசிப்பிற்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads