தேவை நெகிழ்ச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவை நெகிழ்ச்சி (Elasticity of Demand) என்பது எவ்வளவு விலை மாற்றத்திற்கு எவ்வளவு தேவை மாற்றம் ஏற்படும் என்பது குறித்து விளக்குவது ஆகும்.[1] விலை (Price) தேவையைச் (Demand) சார்ந்துள்ளது, விலை மாறும் பொழுது தேவையின் அளவும் மாறும் என்பதைக் கூறுவது தேவை விதியாகும் (Law of Demand). விலை மாற்றத்தையும் அதன் தொடர்பாக தேவையில் ஏற்படும் மாற்றத்தையும் விளக்குவது தேவை நெகிழ்ச்சியாகும்
அறிமுகம்
பொதுவாக இக்கோட்பாடு பேராசிரியர் ஆல்பிரடு மார்சல் பெயருடன் இணைந்துப் பேசப்பட்டாலும் கவுர்நட், மில் போன்றவர்கள் ஏற்கனவே இக்கருத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.[2]
விலை குறைந்தால் தேவை அதிகரிக்கும் என்பது பொதுவிதி. 10 விழுக்காடு விலை குறைந்தால், அதிகரிக்கும் தேவை சமமான விகிதத்தில் இருக்கும் என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக உப்பு, வாழைப்பழம், சர்க்கரை, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்றவையின் விலை 10 விழுக்காடு குறைந்தால், அவற்றின் தேவை 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறமுடியாது. விலை குறையும் பொழுது ஒருசில பொருட்களின் தேவை அதிக விகிதத்தில் கூட வாய்ப்பு உண்டு. ஆனால் வேறு சில பொருட்களின் தேவை அதிகமான விகிதத்தில் கூட வாய்ப்பு இருக்காது.
இதைத்தான் பொருளியலில் ஒருசில பொருட்கள் தேவை நெகிழ்ச்சியுள்ளவை (Elastic) என்றும் ஒரு சிலவற்றை நெகிழ்ச்சியற்றவை (Inelastic) என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னும் குறிப்பாக தேவை நெகிழ்ச்சி என்பது பொருள்களின் விலை மாற்றத்தினால் பொருள்களின் தேவைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்ததாகும். தேவை நெகிழ்ச்சி உள்ள பொருள்கள் விலையில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் தேவையில் பொிய மாற்றத்தைக் கொண்டு வருவனவாகும். தேவை நெகிழ்ச்சி இல்லாத பொருள்கள் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருந்தாலும் அது தேவையில் பெரிதாக எதிரொளிக்காது.
Remove ads
இலக்கணம்
மேயாச், “குறிப்பிட்ட தேவைக்கோட்டில், விலையில் ஏற்படுகின்ற சார்பு மாற்றத்தின் விளைவாக, வாங்குகின்ற பொருளின் அளவில் ஏற்படுகின்ற சார்பு மாற்றத்தின் அளவைத்தான் தேவை நெகிழ்ச்சி” என்று கூறுகின்றார். இதனைப் பேராசிாியர் மார்சல் “ஒரு குறிப்பிட்ட விலை வீழ்ச்சியினால் தேவையின் அளவு மிகுதியாகவோ குறைவாகவோ கூடுகிறது என்பதையும், ஒரு குறிப்பிட்ட விலை ஏற்றத்தினால் தேவையின் அளவு, மிகுதியாகவோ, சிறிதாகவோ குறைகிறது என்பதையும் ஒட்டி, ஒரு அங்காடியில் தேவை நெகிழ்ச்சி அதிகமாகவோ, சிறிதாகவோ இருக்கின்றது” என்று கூறுகின்றார்.
Remove ads
தேவை நெகிழ்ச்சியின் வகைகள்
தேவை நெகிழ்ச்சியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
பேராசிரியர் ஆல்பிரடு மார்சல் விலைத் தேவையை மட்டும் குறிப்பிடுகிறார். பிற்காலத்து அறிஞர்கள் மற்ற இரண்டையும் சேர்த்தனர்.
விலைத்தேவை நெகிழ்ச்சி
விலை மாற்றத்தின் காரணமாக தேவையில் ஏற்படும் நெகிழ்ச்சி விலைத்தேவை நெகிழ்ச்சி (Price elasticity of demand) என்றழைக்கப்படுகிறது. இதனை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்:
- PED- விலைத்தேவை நெகிழ்ச்சி
- CD - தேவை அளவின் மாற்ற விகிதம்
- CP - விலை மாற்றவிகிதம்
விலைத் தேவை நெகிழ்ச்சியின் வகைகள்
விலைத் தேவை நெகிழ்ச்சியானது நிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை, முற்றிலும் நெகிழ்வற்ற தேவை, ஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி, ஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி, ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி என ஐந்து வகைகளைக் கொண்டது.
நிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை

நிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை (Perfectly elastic demand)- [3] [4] என்பது, பொதுவாக ஒரு காரணி (Variable) விலை சிறிது உயா்ந்தாலும் தேவை பெருமளவு குறைந்து பூஜ்யமளவிற்கும், விலை சிறிது குறைந்தாலும் தேவை அளவிட முடியாத அளவிற்கு அதிகமாவதும் இதன் குணங்களாகும் ஆனால் இயல்பு வாழ்க்கையில் இது போன்ற பொருள்களைக் காண்பது இயலாது. படத்தில் உள்ளதுபோல் தேவைக்கோடு நேர் படுக்கைக்கோடாக இருக்கும் (D D1)
முற்றிலும் நெகிழ்வற்ற தேவை

முற்றிலும் நெகிழ்வற்ற தேவை (Perfectly inelastic demand)- [3] என்பது, பொதுவாக ஒரு காரணி (Variable) மிகப்பெரிய அளவில் விலையில் மாற்றம் இருந்தாலும் தேவையில் பெரிய மாற்றங்கள் இராது. இதுவும் இயல்பு வாழ்வில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேவைக்கோடு படத்தில் உள்ளது போல் செங்குத்தாக இருக்கும் ( D D1 )
ஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி

சிறிதளவு விலைமாற்றம், தேவையில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக விலையில் 10% மாற்றம் ஏற்பட்டு இதன் காரணமாக தேவையில் 20% மாற்றம் ஏற்பட்டால் அது ஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவிலை நெகிழ்ச்சி (Relatively elastic demand)ஆகும்.
வரைபடத்தில் DD1 என்று கோடு தெளிவாக்குகிறது. இது இடமிருந்து வலமாகச் சரிந்து செல்லும். விலை P ஆனது P1 என மாறும் போது தேவையின் அளவு அதைவிட அதிகமாக Q ஆனது Q1 என மாறும்.
ஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி

விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு தேவையில் அதைவிடக் குறைவான மாற்றம் ஏற்பட்டால் இது ஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி அல்லது ஒன்றுக்கு குறைவான தேவை நெகிழ்ச்சி (Relatively inelastic demand) ஆகும். எடுத்துக்காட்டாக விலையில் 20% மாற்றம் ஏற்பட்டு தேவையில் இதன் காரணமாக 10% மட்டும் மாற்றம் ஏற்பட்டால் அது இவ்வகையைச் சாரும்.
வரைபடத்தில் DD, இதனைக் குறிக்கும்.
ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி
விலையில் ஏற்படும் மாற்றமும், தேவையில் ஏற்படும் மாற்றமும் ஒரே விகிதத்தில் இருந்தால் அது இவ்வகை ஆகும். விலையில் 10% மாற்றம் தேவையிலும் 10% மாற்றத்தை ஏற்படுத்தினால் அது ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி (Unitary elastic demand) ஆகும்.
வருவாய்த் தேவை நெகிழ்ச்சி
நுகர்வோரின் வருவாய் மாற்றத்தினால் ஏற்படும் தேவைநெகிழ்ச்சி வருவாய்த் தேவை நெகிழ்ச்சி எனப்படும் (Income elasticity of demand).
சமன்பாடு:
- IED- வருவாய்த் தேவை நெகிழ்ச்சி
- CD - தேவை அளவின் மாற்று விகிதம்
- C I- வருவாயின் மாற்று விகிதம்
குறுக்குத்தேவை நெகிழ்ச்சி
ஒரு பொருளின் விலையில் ஏற்படுகின்ற மாற்றத்தின் காரணமாக மற்றொரு பொருளின் தேவையில் ஏற்படுகின்ற மாற்றம் குறுக்குத்தேவை நெகிழ்ச்சி (Cross Elasticity of Demand)எனப்படும்.
சமன்பாடு:
- CED- குறுக்குத் தேவை நெகிழ்ச்சி
- A-A பொருளின் தேவையில் ஏற்படும் மாற்றம்
- B-B பொருளின்தேவை விலையில் ஏற்படும் மாற்றவிகிதம்
Remove ads
தேவை நெகிழ்ச்சியின் காரணிகள்
- பொருளின் இன்றியமையாமை-பொருள் எவ்வெளுக்கெவ்வளவு இன்றியமையாததாக உள்ளதோ அவ்வளவு வரை அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். பொருள் இன்றியமையாததாக இருந்தால், விலை ஏற்றாத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் வாங்கிப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். உப்பு, அரிசி போன்றவை எடுத்துக்காட்டாகும். அதுபோல ஆடம்பரப் பொருள்கள் மிகவும் தேவை நெகிழ்ச்சி உள்ளவைகளாக இருக்கும். விலையில் சிறிய மாற்றம் கூட தேவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்றவை எடுத்துக்காட்டு ஆகும்.
- வருமானத்தின் செலவின் வீதம்-வருமானத்தின் பெரும் பகுதி ஒரு பொருளில் செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். மாறாக குறைவான பகுதி செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும்.
- பதிலீட்டுப் பொருள்- (Existance of Substitutes) [3]பொதுவாக ஒரு காரணி ( Variable) ஒரு பொருளுக்குப் பதிலீட்டுப் பொருள்கள் இருந்தால் அந்த பொருளுக்கு நெகிழ்வான தேவை இருக்கும். இல்லையென்றால் தேவை நெகிழ்வற்றதாக இருக்கும்.
- பழக்கம் (Habit)- பழக்கத்தினால் ஒருசில பொருட்கள் அவசியமாகத் தேவைப்படும் பொழுது தேவை நெகிழ்வற்றதாக இருக்கும்.
- பலபயன்- பலபயன்களுக்கு ஒரு பொருள் தேவைப்படும் பொழுது அதன் தேவை நெகிழ்வானதாக இருக்கும்
- ஒத்திப்போடும் தன்மை- நுகர்ச்சியை ஒத்திப்போடும் தன்மையுடைய பொருள்களுக்கு தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
- காலம்- குறுகிய காலத்தில் ஒரு பொருளுக்கு தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். நீண்டகாலத்தில் நெகிழ்ச்சியுடையதாக இருக்கும்.
Remove ads
தேவை நெகிழ்ச்சியை அளக்கும் முறைகள்
பொருளியலில் இது போன்ற ஒரு கோட்பாட்டை அளப்பது முக்கியம் வாய்ந்தது, தேவை நெகிழ்ச்சியை அளந்து அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதுதான் இதன் முக்கிய பயனாகும்.[3] பொதுவாக ஒரு காரணி (Variable) மாறும் பொழுது இன்னொரு காரணி எவ்வளவு மாறுகிறது என்பதை அளப்பது இதற்கு அடிப்படையாக அமைகிறது. காரணி ‘B’ யின் மாற்றத்தால் காரணி ‘A’ எவ்வளவு மாறியுள்ளது என்பது அளக்கப்பட வேண்டும் தேவை நெகிழ்ச்சியை நான்கு முறைகளில் அளக்கலாம். அவைமொத்த வருவாய் அல்லது செலவு முறை, புள்ளிமுறை, [1] வில்முறை, விசிதாச்சார முறை ஆகியனவாகும்
மொத்த வருவாய் அல்லது செலவு முறை
மொத்த வருவாய் அல்லது செலவு முறை (Total outlay or Expenditure method) என்பது பேராசிரியர் மார்சல் வகுத்துக் கொடுத்த முறையாகும். இம்முறையின் கீழ் வாங்குவோர் விலை மாறுதலுக்கு முன்னும் பின்னும் எவ்வளவு வாங்கினார்கள், மொத்தவருமானத்தில் தாக்கம் என்ன என்பதைக் கணக்கிட்டு தேவை நெகிழ்ச்சியின் அளவைக் கூறலாம்.
விலை மாறும் போது தேவை மாறுவதால் மொத்த செலவும் மாறும்.
கீழ்கண்ட அட்டவணையைக் காணவும்:
இவ்வட்டவணையின்படி, பொருளின் விலை 4 ரூபாய் குறைந்த பொழுது, தேவையின் அளவு அதிகரித்தும் மொத்த செலவில் மாறுதல் இல்லை.
கீழ்கண்ட அட்டவணையைக் காணவும்:
இவ்வட்டவணையின்படி, விலை குறைந்து தேவை அதிகரிக்கின்றது. தேவையின் அளவு விலைமாற்று அளவை விட அதிகரித்திருப்பதால் மொத்த செலவு அதிகரித்துள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட நெகிழ்ச்சியுள்ள தேவை எனப்படுகிறது.
விலை குறைந்த அளவை விட தேவை கூடிய அளவு குறைவாக இருந்தால் மொத்த விற்பனைத் தொகை குறையும். இது ஒன்றிற்குக் குறைவான நெகிழ்ச்சியைக் காட்டுகிறது. இதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்:

மொத்த வருவாய் முறையை வரைபடத்தில் காணலாம். வரைபடத்தில் OX ல் மொத்த வருவாயையும் OY அச்சில் விலையையும் குறிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய்க்கான வரைகோடு வரையப்பட்டுள்ளது.
- விலை OP” யிலிருந்து OP ஆகக்குறையும் பொழுது மொத்த வருவாய் கூடிக்கொண்டே வருகின்றது. இப்பகுதியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு மேல் இருக்கும் (Ed>1).
- OP விலைக்கும் OP1 விலைக்குமிடையில் மொத்த வருவாய் மாறாமலிருக்கிறது. இப்பகுதியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமானதாக இருக்கும் (Ed=1).
- OP’ விலைக்குக் கீழ் விலைகுறையுமானால் மொத்த வருவாய் குறைவானதாக இருக்கும் (Ed<1).
புள்ளிமுறை அல்லது ஜியோமிதி முறை

தேவைக்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் தேவை நெகிழ்ச்சியை அளவிடப் புள்ளிமுறை (Point method)[1] பயன்படுகிறது. இதனை ஜியோமிதி முறை (Geometrical method) என்று கூறுவார்கள்.
D D1 தேவைக்கோடு. இதில் P2 புள்ளியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றிற்கு சமமாக ( Ed=1 ) இருக்கும். DP2 விலையின் மாற்ற அளவையும், P2 D1 தேவையின் மாற்ற அளவையும் குறிக்கும். இரண்டின் நீளமும் சமமாக இருப்பதால் இப் புள்ளியில் தேவையின் நெகிழ்ச்சி ஒன்றாக இருக்கும்.
வில்முறை
இரண்டு மாறுபட்ட விலைகளுக்கும், அதனால் ஏற்படும் இரண்டு மாறுபட்ட தேவைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும் பொழுது, தேவை நெகிழ்ச்சியை அளக்க வில் முறையைப் [1] பயன்படுத்தப்படுகிறது. வில் என்பது வளைக்கோட்டில் இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட பகுதியை குறிக்கிறது. வில் முறையில் நெகிழ்ச்சியை அளவிட கீழுள்ள சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்
- Q - முதலிலிருந்த தேவை
- Q1- மாற்றத்திற்குப்பின் தேவை
- P - முதலிலிருந்த விலை
- P1- மாற்றத்திற்குப் பின் விலை
விகிதாசார முறை
விகிதாசார முறையில் (Proportional method) விலையில் ஏற்படும் சரிவிகித மாற்றத்தையும் தேவையில் ஏற்படும் சரிவிகித மாற்றத்தையும் ஒப்பிட்டு தேவை நிகழ்ச்சி கணக்கிடப்படுகிறது
கீழ்க்கண்ட சமன்பாடு இதனை விளக்குகிறது:
- ED- தேவை நெகிழ்ச்சி
- D1- தேவை மாற்றம்
- D - தேவையின் அளவு
- P1- விலையின் மாற்றம்
- P - விலையின் அளவு
Remove ads
பயன்கள்
- விற்பனையாளர்கள் குறிப்பாக முற்றுரிமையாளர்கள் பொருட்களின் விலையை நிர்ணயிக்க இக்கருத்து உதவுகின்றது. ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி கொண்டதாக இருந்தால் விலையைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும்; நெகிழ்ச்சியற்றதாக இருந்தால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்கலாம்
- பேதம் காட்டும் முற்றுரிமையாளர்கள் (Discriminating Monopolist) ஒரு அங்காடியின் பல்வேறு பகுதிகளில் ஒரேமாதிரியான பொருளைப் பல விலைகளில் விற்கின்றனர். தேவை நெகிழ்ச்சியுள்ள அங்காடிகளில் குறைந்த விலைக்கும், தேவை நெகிழ்ச்சியற்ற அங்காடிகளில் அதிகவிலைக்கும் விற்கின்றனர் இவ்வாறு முற்றுரிமை செய்வதற்கு இக்கருத்து உதவியாக உள்ளது([5]
- அரசின் வரிவிதிப்புக் கொள்கைக்கும் இது உதவியாக இருக்கும். நெகிழ்வற்ற பொருள்களின் மீது வரிவிதிப்பதினால் வருவாய் அதிகமாக ஈட்டுவதற்கு வாய்ப்பு உண்டு
- பன்னாட்டு வாணிகத்தில், இருநாடுகளும் வாணிகம் செய்யும் போது பொருட்களின் மாற்று வீதத்தை தீர்மானிக்க இது உதவும். ஒருநாடு ஏற்றுமதி செய்யும் பொருள் தேவை நெகிழ்வற்றதாக இருந்தால் விலை ஏற்றுமதியாளருக்கு சாதகமாக அமையும்.
- உள்நாட்டுச் செலாவணியோடு அன்னியச் செலாவணியின் மாற்று வீதத்தைத் தீர்மானிக்க தேவை நெகிழ்ச்சிக் கருத்து உதவுகின்றது.
- முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் உற்பத்திக் காரணிகளின் ஊதிய நிர்ணயித்திற்கு, தேவை நெகிழ்ச்சி உதவும். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட தொழிலில் தொழிலாளர்களுக்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்குமானல் தொழிற்சங்கத்தினால் கூலியை உயர்த்த முடியும். இது மற்ற உற்பத்திக்காரணிகளுக்கும் பொருந்தும்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads