தேவ்பந்தி

இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தியோபந்தி (Deobandi, (Persian: دیو بندی, Urdu: دیو بندی, Bengali: দেওবন্দী, Hindi: देवबन्दी) என்பது இசுலாமின் சுன்னி பிரிவினரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும்.[1] இவ்வியக்கம் இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயங்குகிறது. தற்போது ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிரிக்கா வரை பரவியுள்ளது.[2] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தேவபந்து நகரின் பெயரில் இருந்து பிறந்தது. இந்நகரில் தாருல் உலூம் தேவ்பந்து பள்ளி அமைந்துள்ளது. இவ்வியக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தோல்வியுற்ற சிப்பாய்க் கிளர்ச்சியின் பின்னணியில் 1867 இல் நிறுவப்பட்டது.[3]

இவ்வியக்கத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள்: 1) குர்ஆனிலும் நபிமொழிகளிலும் உள்ளவாறு இசுலாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது, 2) அந்நிய ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உரிமைப் போராட்டத்தை தொடா்வது. முகமது ஹசன் என்ற புதிய தேவ்பந்தி இயக்கத் தலைவர் இப்பிரிவின் சமயக் கருத்துகளில் அரசியல், அறிவியற் சிந்தனைகளைப் புகுத்தினார். இசுலாத்தின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினரிடையே ஒரு அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads