தைட்டானிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைட்டானிக் அமிலம் (Titanic acid) என்பது தைட்டானியம் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் சேர்மங்களின் பொதுவான பெயராகும். இவ்வகை தைட்டானிக் அமிலங்களின் பொதுவாய்ப்பாடு [TiOx(OH)4–2x]n.. எனக் குறிப்பிடப்படுகிறது. பல எளிய தைட்டானிக் அமிலங்கள் இருப்பதாக முற்காலத்தில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அக்கருத்து, எந்தவொரு படிகவியல் மற்றும் நிறமாலையியல் ஆய்வுகளின் ஆதரவையும் பெற்றிருக்கவில்லை. சில பழைய நூல்கள், பிராவர் கையேடு உட்படTiO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள சேர்மத்தையே தைட்டானிக் அமிலம் எனக் குறிப்பிடுகின்றன[1]
- மெட்டா தைட்டானிக் அமிலம்.(H
2TiO
3),[2] - ஆர்த்தோ தைட்டானிக் அமிலம்: வெள்ளை உப்பு போன்ற தோற்றத்துடன் "TiO3•2.16H2O."(H
4TiO
4).[3][4] என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது. - பெராக்சோ தைட்டானிக் அமிலம்: தைட்டானியம் ஈராக்சைடுடன் கந்தக அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியனவற்றைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறத் திண்மமாக விளையும் விளைபொருள் ஆக்சிசனை இழந்து சிதைவடைகிறது.[5]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads