தையல் சிட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தையல்சிட்டு (Tailorbird) என்பது ஆர்த்தோமசு பேரினத்தினைச் சேர்ந்த சிறிய வகைப் பறவைகள் ஆகும்.
Remove ads
விளக்கம்
தையல்சிட்டுக்களில் பெரும்பாலானவை ஆர்த்தோமசு பேரினத்தைச் சேர்ந்தவை. இவை பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடேயில் வைக்கப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வுகள் சிசுடிகோலிடே குடும்பத்தினை சேர்ந்தவை இவை என வகைப்பாட்டியலாளர்கள் கோயோ மற்றும் பலரால் கருதப்படுகின்றன.[1] இப்பேரினத்தினைச் சேர்ந்த முன்னாள் சிற்றினம், மலை தையல்சிட்டு பழைய உலக கதிர்க்குருவி பேரினமான செடியாவுடன் நெருங்கிய தொடர்புடையது.[2]
தையல்சிட்டு பழைய உலக வெப்ப மண்டலப்பகுதியான, முக்கியமாக ஆசியாவில் காணப்படுகின்றது.
இந்த கதிர்க்குருவிகள் பொதுவாக பிரகாசமான நிறத்தில் காணப்படும். இவற்றின் மேற்பகுதிகள் பச்சை அல்லது சாம்பல் மற்றும் மஞ்சள் வெள்ளை அல்லது சாம்பல் நிற்த்தில் இருக்கும். இவை பெரும்பாலும் தலைப்பகுதி கசுகொட்டை நிறத்திலிருக்கும்.
தையல்சிட்டுகள் குறுகிய வட்டமான இறக்கைகள், குறுகிய வால்கள், வலுவான கால்கள் மற்றும் நீண்ட வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. வால் பொதுவாக ஒரு விரென் பறவைகளுக்கு உள்ளது போல நிமிர்ந்து காணப்படும். இவை பொதுவாக திறந்த வனப்பகுதி, புதர் மற்றும் தோட்டங்களில் காணப்படுகின்றன.
தையல்சிட்டு என்னும் பெயர் கூடுகட்டும் விதத்தினைக் கொண்டு அமைந்த காரணப் பெயராகும். பெரிய இலைகளின் ஓரங்களை துளையிட்டு தாரவ நார் மற்றும் சிலந்திகளின் கூட்டை பயன்படுத்தி தையல்சிட்டு தன் கூட்டை தைத்து அமைக்கிறது.
Remove ads
சிற்றினங்கள்
ஆர்த்தோமசு எனப்படும் தையல்சிட்டு பேரினத்தில் 13 சிற்றினங்கள் உள்ளன.
இரண்டு சிற்றினங்கள் செட்டிடே குடும்பத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
- மலை தையல்சிட்டு, பில்லர்கேட்சு குக்குலேடசு
- பழுப்பு தலை தையல்சிட்டு, பில்லர்கேட்சு கெட்டோரோலிமசு
Remove ads
படங்கள்
- சாதாரண தையல்சிட்டு
- சாதாரண தையல்சிட்டு
- கூட்டின் உள்ளே தையல்சிட்டின் முட்டைகள்
- தையல்சிட்டு கூட்டின் வெளிப்புறம்
- கூட்டின் உள்ளே அடைகாக்கும் தையல்சிட்டு
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
