தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தைவான் அன்னாசி அருங்காட்சியகம் (Taiwan Pineapple Museum) தைவான் நாட்டின் தாசு மாவட்டத்தில் இருக்கும் காவோசியுங்கு நகராட்சியில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும்.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்த அருங்காட்சியகம் 1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இயோசியுடாங் தைஃபாங்கு நிறுவனம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பண்ணைகளில் தயாரிக்கப்பட்ட அன்னாசிப்பழங்களை பெட்டிகளில் நிரப்பும் தொழிற்சாலையாகும். [1] [2] 2004 ஆம் ஆண்டில், தொழிற்சாலை கட்டிடம் காவோசியங்கு மாகாண அரசாங்கத்தால் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டது. கட்டிடம் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் என மீண்டும் திறக்கப்பட்டது.[3]

Remove ads

கண்காட்சிகள்

அருங்காட்சியகத்தில் இயோசியுடாங் தைஃபாங் நிறுவனமும் தாசு மாவட்டத்தின் வரலாறும் காட்சிப்படுத்துகிறது. இப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள், குறிப்பாக அன்னாசிப்பழ தொழில் பற்றிய கண்ணோட்டமும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அன்னாசிப்பழ முத்திரைகளின் தொகுப்புகளின் திரட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. [3]

போக்குவரத்து

தைவான் இரயில்வேயின் இயுகியுடாங் நிலையத்திற்கு வடக்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அணுக முடியும்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads