தொடர்பற்ற மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொடர்பற்ற மக்கள் (Uncontacted people), தனித்துவிடப்பட்ட மக்கள் (isolated people) அல்லது இழந்த பழங்குடிகள் (lost tribes) என்று குறிப்பிடப்படுவது, தம்முடைய தெரிவால் (தன்னார்வ தனிமைப்படுத்தலால்) அல்லது சூழ்நிலையால் உலக நாகரிகத்துடன் குறிப்பிடத்தக்க தொடர்பற்று வாழும் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகங்களைக் குறிக்கும். சில மக்கள் உலக நாகரிகத்துடன் எதுவித தொடர்பும் அற்று வாழ்கின்றனர். "சுதேசிகள் உரிமை" ஆர்வலர்கள் அவர்கள் தனித்துவிடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதுவிட்டால் அவர்களின் உரிமைக்கும் தன்னாட்சி உரிமைக்கும் இடையூறு செய்வதாகும் என்கின்றனர்.[1] பல தொடர்பற்ற சமூகங்கள் தென் அமெரிக்கா, நியூ கினி, இந்தியா, நடு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றனர். இக் குழுக்களின் இருப்பு பற்றிய அறிவு அடிக்கடி நிகழாமல், சிலவேளைகளில் அண்டைய பழங்குடிகளுடன் வன்முறையில் ஈடுபடல், வான் படப்பிடிப்பு மூலம் அறியப்படுகிறது. தனித்துவிடப்பட்ட பழங்குடிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்பட்டு பொது நோய்களுக்கு ஆளாகலாம். அவர்களைத் தொடர்பு கொண்ட பின்பு, அம்மக்களில் பெரிய வீதம் கொல்லப்படலாம்.[2][3]

Remove ads
குறிப்பிடத்தக்க தொடர்பற்ற பழங்குடிகள்
- சென்டினல் மக்கள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா
- ஜாரவா பழங்குடியினர் - அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads