தொல்காப்பியர்
தமிழ் இலக்கண நூலாசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.[2] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.
- தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்[3] என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது[4]' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்[5] என தமிழ் சிடடீசு என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
- "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது[6]" என வித்வான் க. வெள்ளைவாரணனார் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
Remove ads
தொல்காப்பியர் விருது
ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.
தொல்காப்பியர் விருது பெற்றோர்.
- 2005-2006 - அடிகளாசிரியர்
- 2006-2007 - வழங்கப்படவில்லை
- 2007-2008 - வழங்கப்படவில்லை
- 2008-2009 - பேராசிரியர் சி. கோவிந்தராசனார்
- 2009-2010 - பேராசிரியர். ஐராவதம் மகாதேவன்
- 2010-2011 - பேரா. தமிழண்ணல்
- 2011-2012 - பேரா. செ.வை. சண்முகம்
- 2012-2013 - டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- 2013-2014 - முனைவர் சோ. ந. கந்தசாமி
- 2014-2015 - முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
- 2015-2016 - முனைவர் இரா. கலைக்கோவன்
முதலான தமிழறிஞர்கள் தொல்காப்பியர் விருதினைப் பெற்றுள்ளனர். [7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads