தொல்குடி அமெரிக்கர்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பு

From Wikipedia, the free encyclopedia

தொல்குடி அமெரிக்கர்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பு
Remove ads

தொல்குடி அமெரிக்கர்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பு (Cultural assimilation of Native Americans), 1790 முதல் 1920 வரையிலான ஆண்டுகளில் பழங்குடி அமெரிக்கர்களின் பண்பாட்டை, பெரும்பான்மை ஐரோப்பிய-அமெரிக்கப் பண்பாட்டுட்டுன் ஒருங்கிணைக்க ஐக்கிய அமெரிக்க அரசு மற்றும் கிறித்தவத் திருச்சபைகளும் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளைக் குறிக்கிறது. [1]ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றத்தின் அலைகள் அதிகரித்த நிலையில், பெரும்பான்மையான குடிமக்களால் பொதுவான கலாச்சார விழுமியங்கள் மற்றும் நடைமுறைகளின் ஒரு நிலையான தொகுப்பை ஊக்குவிக்க கல்விக்கான பொது ஆதரவு பெருகியது. சிறுபான்மையினருக்கான மேம்பாட்டுச் செயல்பாட்டில் கல்வி முதன்மையான பார்க்கப்பட்டது.

Thumb
தொல்குடி அமெரிக்கர்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பிற்கான அமெரிக்கப் பழங்குடி உறைவிடப் பள்ளி மாணவர்கள்

இது பழங்குடியினர் ஐரோப்பிய பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்புகளைக் கற்றுக்கொண்டால், பழங்குடி மரபுகளை அமெரிக்க கலாச்சாரத்துடன் இணைத்து, சமூகத்தின் பெரும்பான்மையினருடன் அமைதியான முறையில் சேர முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர்கள் முடிவடைந்த பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஐக்கிய அமெரிக்க அரசு தொல்குடி மக்களின் பாரம்பரிய சமயச் சடங்குகளின் நடைமுறையை சட்டவிரோதமாக்கியது. இதனால் கிறித்துவ திருச்சபைகளின் பராமரிப்பில் உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டது. இப்பள்ளிகளில் அமெரிக்கப் பழங்குடியினரின் குழதைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகளில் பூர்வகுடி குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசவும், பாடங்களைப் படிக்கவும், தேவாலயத்திற்குச் செல்லவும், பழங்குடி மரபுகளை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

1887ஆம் ஆண்டின் டாவ்ஸ் சட்டம், அரசு பழங்குடியினரின் நிலங்களை தனிநபர்களுக்குப் பலவகைகளில் ஒதுக்கியது. பூர்வகுடி அமெரிக்கர்களை, அமெரிக்க குடிமக்களாக மாறுவதற்கும், பழங்குடியினரின் தன்னாட்சி மற்றும் நம்பிக்கைகளில் சிலவற்றை விட்டுக் கொடுப்பதற்கும் ஈடாக நில ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. இதன் விளைவாக பூர்வீகுடி மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த 93 மில்லியன் ஏக்கர் (380,000 சதுர கிலோ மீட்டர்) நிலம் அமெரிக்க அரசால் இடமாற்றம் செய்யப்பட்டது. பெரும்பாலானவை தனிநபர்களுக்கு விற்கப்பட்டன அல்லது ஹோம்ஸ்டெட் சட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டன அல்லது தனிநபர்களாக பழங்குடி அமெரிக்க இந்தியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. 1924ஆம் ஆண்டில் தொல்குடி அமெரிக்கர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை வழங்கியது.

Remove ads

வட அமெரிக்காவின் ஐரோப்பியர்கள் மற்றும் பூர்வகுடி அமெரிக்கர்கள், 1601-1776

1634 மற்றும் 1640ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து, வட அமெரிக்காவிற்கு குடும்பங்களுடன் குடியேற்றம் அதிகரித்ததன் விளைவுகளை தொற்றுநோய் பரவத்துவங்கியது. இதனால் அமெரிக்கப் பழங்குடியினர் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர். [5]

ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் பூர்வீக அமெரிக்க பழங்குடியினரை, தங்கள் வட அமெரிக்கப் படைகளில் துணைப் படைகளாக அமர்த்த முற்பட்டது. பழங்குடியினரின் உதவியைப் பெற, ஐரோப்பியர்கள் பொருட்களை வழங்கினர் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்களையும், சுதந்திரத்தையும் ஐரோப்பிய சக்தி மதிக்கும் என்று ஒப்பந்தங்கள் வழக்கமாக உறுதியளித்தன. பல பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் அமெரிக்க உள்நாட்டுப் போர்களில் பங்குபெற்றனர்.

Remove ads

அமெரிக்கா மற்றும் பூர்வீக அமெரிக்கர்கள், 1776–1860

Thumb
1755ஆம் ஆண்டில் கிழக்கு மற்றும் வடக்கு அமெரிக்கா

புதிதாக சுதந்திரம் பெற்ற அமெரிக்கா நாட்டில் உள்ள பல்வேறு பூர்வீக அமெரிக்க பழங்குடியினரைக் கையாள்வதற்கான கொள்கையை வகுப்பதில் முதன்மையாக அக்கறை கொண்டிருந்தது. அரசியல் மற்றும் வர்த்தக காரணங்களுக்காக பழங்குடியினருடன் நல்ல உறவுகள் முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அமெரிக்க உள்நாட்டுப் போர் மற்றும் 1812ஆம் ஆண்டின் போரின் போது அமெரிக்கா, பூர்வீக அமெரிக்கர்களை நட்புடன் பயன்படுத்தத் தொடர்ந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினுடனான உறவுகள் இயல்பாக்கப்பட்டதால், பூர்வகுடி அமெரிக்கர்களின் நட்பு உறவின் தேவை முடிவுக்கு வந்தது. மேலும் பழங்குடியினர் பெரும்பாலும் அமெரிக்காவின் விரிவாக்கத்தில் ஒரு தடையாக பார்க்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கப் பழங்குடியினர் "நாகரிக" செயல்முறையை ஊக்குவிக்க ஒரு கொள்கையை வகுத்தார்.[3] கொள்கையின் ஆறு அம்சத் திட்டம் பின்வருமாறு:

  • பூர்வீக அமெரிக்கர்களுக்கு பாரபட்சமற்ற நீதி வழங்குதல்
  • பூர்வீக அமெரிக்கர்களுக்கு வேளாண் நிலங்களை வாங்குவதை ஒழுங்குபடுத்துவது.
  • பூர்வீக அமெரிக்கர்களின் வர்த்தகத்தை ஊக்குவித்தல்.
  • பூர்வீக அமெரிக்க சமுதாயத்தை நாகரீகப்படுத்த அல்லது மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுத்தல்
  • பூர்வீக அமெரிக்க உரிமைகளை மீறுபவர்களை தண்டித்தல்.[2]

இராபர்ட் ரெமினி எனும் ஒரு வரலாற்றாசிரியர் தனது கீழ்கண்டவாறு விமர்சனம் வைத்துள்ளார். "பூர்வீக அமெரிக்கர்கள் தனிச் சொத்துரிமையைப் பின்பற்றி, வீடுகள் கட்டி, விவசாயம் செய்து, தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி அளித்து, கிறித்தவ மதத்தைத் தழுவியவுடன், இந்த பூர்வீக அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களின் அங்கீகாரத்தைப் பெறுவார்கள்". [9] பூர்வீக அமெரிக்கர்களிடையே வாழ்வதற்கும், வெள்ளையர்களைப் போல் வாழ்வது எப்படி என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் பெஞ்சமின் ஹாக்கின்ஸ் போன்ற முகவர்களை அமெரிக்கா நியமித்தது.

1830ஆம் ஆண்டின் அமெரிக்கப் பழங்குடி மக்களை அகற்றுதல் சட்டம், மிசிசிப்பி ஆற்றின் கிழக்கே வசிக்கும் பூர்வீக அமெரிக்க பழங்குடியினரை ஆற்றின் மேற்குப் பகுதிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்ய அமெரிக்க அரசாங்கக் கொள்கையை வகைப்படுத்தியது. அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றுதல் சட்டம், பழங்குடியினரை தன்னார்வமாக இடமாற்றம் செய்தாலும், அது பெரும்பாலும் அரசு அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல பத்தாண்டுகளாக, பூர்வீக அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேற்கத்திய நிலங்களில் கூட வெள்ளைக் குடியேற்றக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.

Remove ads

பழங்குடியினர்கள் விவகார அலுவலகம்

அமெரிக்கப் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அலுவலகம் 11 மார்ச் 1824 அன்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கீழ் ஒரு அலுவலகமாக நிறுவப்பட்டது. 1849ஆம் ஆண்டில், இப்பபணியகம் உள்துறைத் துறைக்கு மாற்றப்பட்டது. ஏனெனில் அதன் பல பொறுப்புகள் பெரிய நில சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் அகற்றுவது தொடர்பானது.

பழங்குடியினரை அமெரிக்கமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு (1857–1920)

Thumb
ஐரோப்பிய ஆசிரியருடன் அமெரிக்கப் பழங்குடி மாணவர்கள்
Thumb
பழங்குடி மாணவர்கள், ஆண்டு 1879

பழங்குடி அமெரிக்க மக்களின் நண்பர்கள் என்று அழைத்துக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையினர் மற்றும் [[சீர்திருத்தத் திருச்சபை]யினர், அரசு அதிகாரிகளின் உதவியுடன், பழங்குடி குழந்தைகளை அவர்தம் குடும்பத்திலிருந்து பிரித்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து, மேற்கத்திய கல்வி, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள், ஆங்கிலக் கல்வியுடன் கிறிஸ்தவ வழிபாடுகளும் கற்றனர். இதனால் பழங்குடி குழந்தைகள் மேற்கத்திய கலாச்சாரத்துடன் வாழக் கற்றுக்கொண்டனர்.[3] [4]

பழங்குடியின குழந்தைகளுக்காக வட அமெரிக்காவில் 400க்கும் மேற்பட்ட உறைவிடப் பள்ளிகள் திருச்சபைகளின் நிர்வாகத்தில் கட்டப்பட்டது. சுமார் 1,00,000 பூர்வீக அமெரிக்கர்களின் குழந்தைகளை இந்தப் பள்ளிகளில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டனர். இக்குழந்தைகள் தங்கள் சொந்த மொழி, பெயர் மற்றும் பூர்வீக அடையாளங்களை விட்டுக்கொடுக்க கட்டாயம் ஏற்பட்டது. மேலும் பெரிய குழந்தைகளை ஒப்பந்த வேலையாட்களாக வெள்ளையர் குடும்பங்களில் அனுப்பினர். 1969 மற்றும் 1974ஆம் ஆண்டில் அமெரிக்க இந்திய விவகாரங்களுக்கான சங்கம், அனைத்து இந்தியக் குழந்தைகளில் 25-35% பேர் தங்கள் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு வளர்ப்பு இல்லங்கள், தத்தெடுப்பு வீடுகள் அல்லது நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 90% வேலைவாய்ப்புகள் இந்தியரல்லாத வீடுகளில் இருந்தன. தங்களுடைய குழந்தைகளை உறைவிடப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதை எதிர்த்த பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். 1928ஆம் ஆண்டு உள்துறைத் துறையால் நியமிக்கப்பட்ட ஒரு புலனாய்வு அறிக்கை, பூர்வீக அமெரிக்க உறைவிடப் பள்ளிகளின் நிலைமைகளைக் கண்டித்தது. போதிய உணவு இன்மை, நெரிசலான தங்குமிடங்கள், மோசமான மருத்துவ பராமரிப்பு மற்றும் சுரண்டல் குழந்தை தொழிலாளர் நடைமுறைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டியது. 1930களில், பெரும்பாலான உறைவிடப் பள்ளிகள் மூடப்பட்டன.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads