தொழிற்பயிற்சி நிலையங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் கைவினைஞர்கள் பயிற்சிக்காக ஐடிஐ என்னும் தொழிற்பயிற்சி நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 11,964 தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2284 ம், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 9680 ஆகியவையும் அடங்கும். இவற்றில் ஐந்து நிறுவனங்கள், பார்வையற்றோருக்கான சிறப்பு மையங்கள். இங்கிருந்து, 126 வகைத் தொழில்களில் முறையாகப் பயிற்சி பெற்று, ஆண்டுதோறும், சுமார் 23 லட்சம் பேர் தகுதி வாய்ந்த தொழிலாளர்களாக வெளி வருகின்றனர்.[1] இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் இந்திய அரசின் தொழிற்பயிற்சிப் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளுக்கான காலம், பயிற்சிக்கு ஏற்ப ஓராண்டு, இரண்டு வருடங்கள் எனக் கால அளவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியின் முடிவில் நடைபெறும் தேர்வுகளுக்கு வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக அமைக்கப்படுகின்றன. இத்தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சியின் பெயரிலான தேசியத் தொழிற்பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
Remove ads
தொழிற்பயிற்சி நிலைய வகை
இந்திய அரசின் கட்டுப்பாட்டில், மாநில அரசின் நேரடி நிர்வாகத்தில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் என்றும், தனியார் அமைப்புகளின் மூலம் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
தனி தேர்வு வாரியம்
ஐடிஐ முடித்தவர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி வகையைப் பொறுத்து 10 ஆவது அல்லது 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை அளிக்கப் போவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, விரைவில் ஐடிஐ மாணவர்களுக்கு தேர்வு நடத்த, தனி வாரியம் அமைக்கப்படும் என்று நடுவண் அமைச்சர் அறிவித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
இதையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads