தோகா ஒப்பந்தம், 2020
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோகா ஒப்பந்தம் (2020) (Doha Agreement (2020), இதனை ஆப்கானித்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் என்றும் அழைப்பர். இது ஐக்கிய அமெரிக்க நாடு மற்றும் தாலிபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 29 பிப்ரவரி 2020 அன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். [2]இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானித்தான் அதிபர் அஷ்ரப் கனியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் கலீல்சாத் மற்றும் தாலிபான் பிரதிநிதி அப்துல் கனி பராதர் கையெழுத்திட்டனர். [3] [4]இந்த ஒப்பந்தப்படி, ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை 14 மாதங்களுக்குள் (31 ஆகஸ்டு 2021) விலக்கப்படும் என்றும், அதுவரை தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தா படைகள் அமெரிக்கப்படைகளை தாக்குவதில்லை என உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சீனா, ருசியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை வரவேற்றது. [5]
Remove ads
ஒப்பந்தத்திற்கு பிந்தைய மாற்றங்கள்
சூலை 2020-இல் ஆப்கானித்தானில் அமெரிக்கப் படைகளின் அளவு 13,000 முதல் 8,600 வரை குறைத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஐந்து இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்கப்படைகள் திரும்பப் பெற்றது. 11 செப்டம்பர் 2021 தேதிக்குள் அனைத்து அமெரிகக மற்றும் நோட்டோ படைகள் ஆப்கானித்தானிலிருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என 13 ஏப்ரல் 2021 அன்று அறிவித்தார். ஒப்பந்த நாளுக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்குள், ஒப்பந்தத்தை மீறி 15 ஆகஸ்ட் 2021 அன்று தாலிபான் படைகள் காபூலைக் கைப்பற்றியது. [6]இருப்பினும் காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகள் கைகளில் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads