நகரத் திட்டமிடல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகரத் திட்டமிடல் (urban planning) என்பது, நகர்ப்புற நிலப் பயன்பாடு, நகர்ப்புறச் சூழல் வடிவமைப்பு ஆகியவற்றைக் கவனத்திற் கொள்ளும் ஒரு தொழில்நுட்ப, அரசியல் நடைமுறை ஆகும். இது, வளி, நீர், நகர்ப்புறத்துக்கு உள்வருவதும் வெளிச் செல்வதுமான போக்குவரத்து மற்றும் விநியோக வலையமைப்புக்களை உள்ளடக்கிய உட்கட்டுமானங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. நகர்ப்புறக் குடியிருப்புக்கள், நகர்ப்புறங்களுக்குப் போக்குவரத்துச் செய்வனவும் அவற்றோடு வளங்களைப் பகிர்ந்து கொள்வனவுமான துணைச் சமுதாயங்கள் போன்றவற்றின் ஒழுங்கான வளர்ச்சியை நகர்ப்புறத் திட்டமிடல் உறுதி செய்கிறது. ஆய்வுகள், உத்திசார் சிந்தனை, கட்டிடக்கலை, நகர்ப்புற வடிவமைப்பு, பொதுமக்கள் கருத்தறிதல், கொள்கை தொடர்பான பரிந்துரைகள், செயற்படுத்தல், மேலாண்மை போன்றவற்றை இது கவனத்தில் கொள்கிறது.[1]

கட்டிடக்கலை, நிலத்தோற்றக் கலை, நகர்ப்புற வடிவமைப்பு, என்பன கட்டிடச் சூழலின் சிறிய பகுதிகளை மேலும் கூடிய விபரமாகக் கையாளுகின்றன. பிரதேசத் திட்டமிடல் நகரத்திட்டமிடல் துறை கையாள்வதிலும் பெரிய பகுதிகளின் திட்டமிடலைக் குறைந்த விபரங்களுடன் கையாளும் ஒரு துறையாகும்.
இதன் கீழான திட்டங்கள் பல்வேறு வடிவங்களில் அமைகின்றன. இவற்றுள் உத்திசார் திட்டங்கள், முழுமையான திட்டங்கள், முறைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு உத்திகள், வரலாற்றுப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை அடங்குகின்றன.
Remove ads
வரலாறு
திட்டமிடப்பட்ட அல்லது மேலாண்மை செய்யப்பட்ட நகரங்களுக்கான எடுத்துக்காட்டுகள் மிகப்பழைய காலங்களில் இருந்தே கிடைக்கின்றன.
19 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடல், புதிதாக முறைப்படுத்தப்பட்ட கட்டிடக்கலை, குடிசார் பொறியியல் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு, நகரப் பிரச்சினைகளுக்குப் பௌதீக வடிவமைப்புமூலம் தீர்வு காண்பதற்கான அணுகுமுறைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. 1960 ஆண்டிற்குப் பின், நகரத் திட்டமிடல் துறை, பொருளியல் வளர்ச்சித் திட்டமிடல், சமுதாய சமூகத் திட்டமிடல், சூழல்சார் திட்டமிடல் என்பவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது.
20 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடலுக்குரிய பணியின் ஒரு பகுதியாக நகரப் புத்தமைப்பு போன்றவை மூலம், ஏற்கனவே இருக்கின்ற நகரங்களுக்கு நகரத்திட்டமிடல் முறைகளைப் பயன்படுத்துவதும் அமைந்தது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads