நடுவமைநாடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடுவமைநாடிகள் அல்லது நடுவமைச்செல்கள் அல்லது நியூட்ரோபில்கள் (Neutrophils) (இலங்கை வழக்கு:நடுநிலை நாடி) எனப்படுபவை குருதி உயிரணுக்களில் ஒரு வகையான வெண்குருதியணுக்களில் மிக அதிகளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். வெண்குருதியணுக்களில் 60-70% மானவை, இவ்வகை உயிரணுக்களே ஆகும். இவற்றில் உட்கரு பல வடிவங்களில் அமைந்திருக்கும். எனவே இவற்றிற்குப் பல்லுரு உட்கரு நியூட்ரோபில்கள் (Polymorphonuclear Neutrophils) என்றும் பெயர் உண்டு.பொதுவாக இவற்றின் உட்கரு மூன்று தொடக்கம் ஐந்து சோணைகளைக் கொண்டதாக இருக்கும்.இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றும். குறிப்பாக பக்டீரியா தொற்றுக்கு எதிரான நிர்பீடனத்தை (நோய் எதிர்ப்புத்திறனை) ஏற்படுத்தும் பிரதான கலங்கள் நடுவமை நாடிகள் ஆகும்.


Remove ads
வெளி இணைப்பு:
- http://en.wikipedia.org/wiki/Neutrophil_granulocyte
- இந்தக் கட்டுரையையும் பரணிடப்பட்டது 2013-12-05 at the வந்தவழி இயந்திரம், இந்த நிகழ்படத்தையும் [தொடர்பிழந்த இணைப்பு] கண்டால் இவை நுண்ணுயிரிகளைப் பிடிப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads