நடு இரவில் (திரைப்படம்)

சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நடு இரவில் (திரைப்படம்)
Remove ads

நடு இரவில் 1970 இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் அவருடன் மேஜர் சுந்தர்ராஜன், பண்டரி பாய், சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வி. இலட்சுமணன் திரைக்கதையையும், பாலச்சந்தர் வசனத்தையும் எழுதியிருந்தனர். பாலச்சந்தர் இசையையும் அமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் அகதா கிறிஸ்டி (Agatha Cristhe) எழுதிய அண்ட் தென் தேர் வேர் நான் (And Then There Were None) புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[2][3][4]

விரைவான உண்மைகள் நடு இரவில், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

ஒரு செல்வந்தர் நலம் குன்றிய தன் மனைவியை நன்கு கவனித்து வருகிறார். அவருடைய மருத்துவ நண்பர் அவருக்கு ரத்த புற்று நோய் பீடித்துள்ளதாகவும் இருபது நாட்களில் அவருக்கு மரணம் நேரலாம் என்றும் கூறுகிறார். செல்வந்தர் அதிர்ச்சி அடைகிறார். அந்த மருத்துவர் உங்கள் உற்றார், உறவினர் சூழ சிறிது காலம் வாழுங்கள் என கூற அவ்வாறே நடத்துகிறார் செல்வந்தர். ஒன்றன் பின் ஒன்றாக பல கொலைகள் நடக்கின்றன.

இறுதியில் செல்வந்தரால் வாரிசாக அழைக்கப்பட்ட பெண் கொலையுற நேரும்போது செல்வந்தர் கொலையாளியை சுட்டுக் கொல்ல மர்மம் விலகுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிர் வெளிவர, கொலையாளி பற்றி தெரியவருகிறது.

செல்வந்தரும் மரணம் அடைகிறார்.

Remove ads

நடிகர்கள்

  • மேஜர் சுந்தரராஜன் - தயானந்தம்
  • பண்டரி பாய் - பொன்னி (தயானந்தத்தின் மனைவி)
  • சுந்தரம் பாலச்சந்தர் - டாக்டர் சரவணன்
  • சௌகார் ஜானகி - ராகிணி
  • சோ ராமசாமி - சர்வர் மோசு
  • வி. கோபாலகிருஷ்ணன் - ரங்க ராஜன் (சோமநாதனின் மருமகன் / லீலாவின் கணவர்)
  • வி. ஆர். திலகம் - லீலா (இரங்கராஜனின் மனைவி)
  • எம். எசு. எசு. பாக்கியம் - நீலமேகத்தின் மனைவி
  • இ. ஆர். சகாதேவன் - நீலமேகம்
  • கே. விசயன் - அரவிந்தன் (வடிவாம்பாளின் மூத்த மகன்)
  • வி. எசு. ராகவன் - சம்புலிங்கம் (தயானந்தத்தின் தம்பி / பார்வையற்றவர்)
  • சதன் - கல்யாண் (அரவிந்தனின் தம்பி)
  • கொட்டப்புளி ஜெயராமன் - ஜோசப் (தயானந்தத்தின் வீட்டு வேலைக்காரர்)
  • மாலி என்கிற மகாலிங்கம் - மோகனாம்பாளின் மகன்
  • எசு. என். இலட்சுமி - வடிவாம்பாள் (தயானந்தத்தின் சகோதரி)
  • சி.வி.வி. பந்தலு - சோமநாதன்
  • கல்பனா - அனு ராதா (நீலமேகத்தின் மகள்)
  • எசு. ஆர். ஜானகி - மோகனாம்பாள் (தயானந்தத்தின் சகோதரி)
  • ராமானுசம் - மொட்டையன்
  • சரோசா - பங்கசம் (மொட்டையனின் மகள்)
Remove ads

பாடல்கள்

விரைவான உண்மைகள் நடு இரவில், இசை சுந்தரம் பாலச்சந்தர் ...

சுந்தரம் பாலச்சந்தர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை வி. இலட்சுமணன் எழுதியிருந்தார்.

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads