நதிக்கரையினிலே

பொன்வண்ணன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நதிக்கரையினிலே (Nadhi Karaiyinile) என்பது 2003ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பொன்வண்ணன் எழுதி இயக்கிய இப்படமானது. துவக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஜமீலா என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் சுவலட்சுமி, ராசன் பி. தேவ், ராம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை சிற்பி மேற்கொண்டார். பல தாமதங்களுக்குப் பிறகு, 2003 நவம்பரில் படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.

விரைவான உண்மைகள் நதிக்கரையினிலே, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

பொன்னண்ணன் இரண்டாவதாக இயக்கியது ஜமீலா (2003) ஆகும். இப்படத்தில், சுவலட்சுமி, ராசன் பி. தேவ், ராம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். கீழ்ப்படிந்து நடக்கூடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கும் இரண்டு ஆண்களுக்கு இடையிலான தன்முனைப்பு மோதலை இப்படத்தின் கதையாகும். எழுத்தாளர் சாரா அபூபாக்கரின் புதினத்தால் ஈர்க்கப்பட்ட பொன்வண்ணன். அதன் திரைக்கதை உரிமையை வாங்கினார். படத்திற்கு நிதியைப் பெறுவதற்காக தனது திரைக்கதையை இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு சமர்ப்பித்தார். நிறுவனமும் நிதியளிக்க ஒப்புக்கொண்டது. ஜமீலா புதுச்சேரியில் பதினேழு நாட்களில் 35 லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்பட்டது. [2]

Remove ads

வெளியீடு

இந்தத் திரைப்படம் திரையிடல்களில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இது 2002 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி அல்லாத பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்க தூண்டோகோலாக ஆனது.[3] 2001 ஆம் ஆண்டில் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டது. இது ஒரு "முஸ்லீம் படம்" என்று வகைப்படுத்தப்படுவதை படத்தின் விநியோகத்தர் விஸ்வாஸ் சுந்தர் விரும்பாததால், படத்தின் பெயரை நதிக் கரையினிலே என்று மாற்றி 2003 நவம்பரில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [2] இந்த படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெறவில்லை. என்றாலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் மூன்றை இது பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[4] திரைப்படத் துறையை விட்டு விலகுவதற்கு முன்பு சுவலட்சுமி பணிபுரிந்த கடைசி திரைப்படம் இதுவாகும்.

மேற்கோள்கள்

நூலியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads